MKS Others
www.garudabazaar.com

அடடே.. ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்ல எண்ட்ரி கொடுத்த பிக்பாஸ் பிரபலம்! ஆரம்பமே அமர்க்களம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவும் வைரலாகவும் ஓடக் கூடியவை.

biggboss contestant in Bharathi Kannamma Serial today promo

அந்த வகையில் பல்வேறு மக்களை கவர்ந்த சீரியல்களும் முதன்மை சீரியலாக இருந்து வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலுக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்று சொல்லலாம். வழக்கமான சீரியல்களை விட பாரதிகண்ணம்மா சீரியலில் பெண்களுக்கு உத்வேகம் தரக்கூடிய காட்சிகளும் அதிகம் நிறைந்திருக்கும்.

இதற்கு காரணம் இந்த சீரியல் கண்ணம்மாவை மையப்படுத்தி இருப்பதுதான். காதல் திருமணம் செய்த தம்பதியரான பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஆளுக்கொரு குழந்தைகளுடன் பிரிந்து வாழ்ந்து வரும் வேளையில் இவர்கள் இருவரும் எப்போது சேர்வார்கள் என்பதை நோக்கி இந்த சீரியலின் கதை பயணப்படுகிறது. இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்பிரியன் விலகியதை அடுத்து, இப்போது வினுஷா புதிய கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

biggboss contestant in Bharathi Kannamma Serial today promo

இதுவரை கண்ணம்மாவின் மீது சந்தேகப்பட்டு பாரதி பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது கோர்ட் உத்தரவின்படி, விவாகரத்து கோரிய பாரதி, கண்ணம்மாவுடன் சேர்ந்து 6 மாதம் வாழ வேண்டும் என்கிற நிபந்தனையை அடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். எனினும் பாரதி பிடிப்பில்லாமல், கண்ணம்மாவுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் மருத்துவராக இருக்கும் பாரதியின் மருத்துவமனைக்குச் சென்று கண்ணம்மா அவரை சந்திக்கிறார். அவரோ, “நீ எதற்காக வந்திருக்கிறாய்?” என்று கண்ணம்மாவை கேட்கும்பொழுது, “ஒரே தலைவலியாக இருக்கிறது” என்று கண்ணம்மா பதில் சொல்கிறார். உடனெ, “உனக்கு நான் ட்ரீட்மென்ட் பார்க்க மாட்டேன்!” என்று பாரதி விடாபிடியாக கூறுகிறார்.

biggboss contestant in Bharathi Kannamma Serial today promo

அப்போது கண்ணம்மா, “அக்கா” என்று யாரையோ அழைக்கிறார். அப்போதுதான் திடீரென என்ட்ரி கொடுக்கிறார் அறந்தாங்கி நிஷா. விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகளிலும் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. மாரி-2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ள நிஷா, இந்த சீரியலில் எண்ட்ரி கொடுத்து உள்ளே வந்ததும், “கோர்ட் உத்தரவுபடி மனைவியின் உயிருக்கு ஏதாவது ஆச்சு என்றால் அதற்கு கணவன் தான் பொறுப்பு!” என்று ஒரு லா பாயிண்ட்டை எடுத்து விடுகிறார்.

biggboss contestant in Bharathi Kannamma Serial today promo

உடனே பாரதி நிஷாவை கையெடுத்து கும்பிட்டு, “நான் கண்டிப்பாக ட்ரீட்மெண்ட் பார்க்கிறேன்!” என்று சொல்லி கண்ணம்மாவுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கிறார். ட்ரீட்மெண்ட் முடிந்த பிறகு கண்ணம்மாவுக்கு பார்த்த வைத்தியத்திற்கு 1500 ரூபாய் கட்டணம் சொல்கிறார் பாரதி. அதற்கு நிஷா அதிர்ச்சியாகிறார். கண்ணம்மா, “ஒரு ஆலோசனை கட்டணம் இவ்வளவு ரூபாயா?” என்று அதிர்கிறார்.

biggboss contestant in Bharathi Kannamma Serial today promo

அப்போது, “இந்த மாதத்தில் இருந்து இதுதான் கட்டணம்!” என்று பாரதி சொல்ல, அதற்கு கண்ணம்மாவும் தன் வீட்டில் தங்கி உணவு சாப்பிடும் பாரதி அதற்கு கணக்கு வைத்துள்ளதாகவும், அந்த கணக்கு 1545 ரூபாய் என்றும் குறிப்பிட்டு, “கூடுதலாக 45 ரூபாய் நீங்கள்தான் எனக்கு தர வேண்டும்!” என்று கேட்கிறார்.

biggboss contestant in Bharathi Kannamma Serial today promo

இப்படியாக இந்த புரோமோ முடிகிறது. அறந்தாங்கி நிஷா பாரதி கண்ணம்மா சீரியலில் சிறப்பு ரோலில் நடிக்க வந்து இருக்கிறாரா? அல்லது தொடர்வாரா? என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும்! 

தொடர்புடைய இணைப்புகள்

biggboss contestant in Bharathi Kannamma Serial today promo

People looking for online information on Bharathi Kannamma, Bharathi Kannamma Serial today promo, Biggboss, Biggboss 5 tamil, BiggBoss Contestant, BIGGBOSS TAMIL, Biggbosstamil, Vijay Television, Vijay tv will find this news story useful.