www.garudabazaar.com

வருது.. வருது.. 24 மணி நேரமும் ஓடும் புது நியூஸ் சேனல் வருதா? ஆனா.. விஜய் டிவியலா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி, தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் முன்னணி சேனல்கள் ஒன்றாக விளங்குகிறது.

is this vijay television new form official announcement

எண்டர்டெயின்மெண்ட்

ஆடல், பாடல் நகைச்சுவை பொழுதுபோக்கு ரியாலிட்டி என அனைத்து விதமான நிகழ்ச்சிகளையும் விஜய் டிவி ஒளிபரப்பு செய்து வருகிறது. எனினும் விஜய் டிவி பொதுமக்களை எண்டர்டெயின் பண்ணும் நிகழ்ச்சிகளையே இதுவரையில் ஒளிபரப்பாகி வந்தது.

Also Read: இவரு ஆடுனாலே பார்ட்டிதான்.. புஷ்பா ஸ்ரீவள்ளி Song-க்கு Signature Step போட்ட கிரிக்கெட் பிரபலம்! வைரல் வீடியோ

ஆடல், பாடல், நகைச்சுவை

நகைச்சுவை என்றால் கலக்கப்போவது யாரு மற்றும் காமெடி சாம்பியன்களை  வைத்து நகைச்சுவை நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை விஜய் டிவி ஒளிபரப்பு செய்து வந்தது. இதேபோல் சூப்பர் சிங்கர் என்பது விஜய் டிவியில் பிரபலமான பாடல் ஷோவாக இருந்து வருகிறது. இதில் திறமையான பாடகர்கள் பலரும் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றனர். முன்னதாக விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 என்கிற நடனமாடும் ரியாலிட்டி நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக அறியப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலம் பலரும் உலகுக்கு தெரிய வந்திருக்கின்றனர்.

பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சி

இதேபோல் விஜய் டிவியில் அண்மைக்காலங்களாக பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மிக முக்கிய கவன ஈர்ப்பு செய்து வருகிறது. இதுவரை 5 சீசன்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. அண்மையில்தான் ஐந்தாவது சீசன் நிறைவடைந்திருக்கிறது.  இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி என்கிற வித்தியாசமான ஜனரஞ்சகமான சமையல் நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிறது.

Also Read: ஹீரோயின்கள், மாடல்னு 12 பேரு.. நடிகர் நகுல், BiggBoss முகேன் பங்கேற்கும் புதுமையான ரியாலிட்டி ஷோ!  லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!

சீரியல்கள் மற்றும் விவாத நிகழ்ச்சி

இவற்றைத்தவிர சீரியல்கள் மற்றும் நீயா நானா போன்ற சமூக விவாத நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருவதை காண முடிகிறது. இப்படி சமூகத்தின் அனைத்து விஷயங்களையும் கவர்ந்து அனைத்துவிதமான பார்வையாளர்களையும் தன்னகத்தே தக்க வைத்திருக்கும் விஜய் டிவியானது விஜய் சூப்பர், விஜய் மியூசிக் உள்ளிட்ட சேனல்களையும் கொண்டுள்ளது.

புதிய பரிமாணம்

இந்த சேனல்களில் முறையே திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் விஜய் டிவி ஒரு புதிய பரிமாணத்தை எடுத்திருக்கிறது. அதன்படி பொழுதுபோக்கு அம்சங்களை கொடுப்பதில் முதன்மையாக விளங்கிவரும் விஜய் டிவி ஏன் மற்ற டிவி சேனல்களை போல செய்திகளை வழங்குவதில்லை என்கிற கேள்வி பலரிடையே எழுந்து வந்தது.

செய்தி சேனல்

இந்நிலையில் தற்போது 24 மணி நேரமும் செய்திகளை ஒளிபரப்பு செய்ய தொடங்கவிருக்கும் புதிய சேனல் குறித்த அறிவிப்பு ஒன்று, விஜய் டிவி உட்பட பல சேனல்களில் வெளியிடப் பட்டிருக்கிறது. இதுதொடர்பான அந்த அறிவிப்பில் 24 மணி நேரமும் 7 நாட்களும் செய்திகளை வழங்கவிருக்கும் புதிய சேனல் குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த செய்தி சேனல் விஜய் டிவியில் வரப்போகிறதா? அல்லது வேறு சேனலா என்பது குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.  

Also Read: என்ன திடீர்னு ட்ரெண்ட் ஆகுது! ட்விட்டரை தெறிக்கவிடும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு!!

தொடர்புடைய இணைப்புகள்

is this vijay television new form official announcement

People looking for online information on Bigg Boss OTT, Bigg Boss Tamil, Cook with comali 3, Cook With Comali Season 3, Trending, Vijay Television, VIJAYNEWS, Vijaytvnews will find this news story useful.