www.garudabazaar.com

'தமிழும் சரஸ்வதியும்' கதை என்னனு தெரியுமா?.. விஜய் டிவியின் அடுத்த 'செம்ம' சீரியல்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனித்துவமான மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் முன்னோடியாக இருந்து வரும்  ஸ்டார் விஜய் சேனலில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி, ராஜா ராணி போன்ற வெற்றித்தொடர்களின் வரிசையில், ‘தமிழும் சரஸ்வதியும்’ என்கிற புதிய தொடர் உதயமாகியுள்ளது.

Nakshatra Deepak Thamizhum Saraswathiyum VijayTV launch

இந்த தமிழும் சரஸ்வதியும் தொடரின் கதை இதுதான்... சரஸ்வதி வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் ஒரு ஆர்வமுள்ள பெண்.  ஆனால் அவளால் பன்னிரெண்டாம் வகுப்பை கூட படித்து முடிக்க முடியாமல் போனது. சரியாக படிக்காததற்காக தனது தந்தையிடமிருந்து வரும் தொடர்ச்சியான விமர்சனங்களிலிருந்து தப்பிக்க அவள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.

Nakshatra Deepak Thamizhum Saraswathiyum VijayTV launch

இதேபோல் தமிழ் என்கிற தமிசெல்வன் மிகவும் பொறுப்பான மற்றும் மரியாதைக்குரியவன்.  தமிழ் தனது கல்வியை நிறுத்திவிட்டு, சூழ்நிலைகளால் சிறிய வயதிலேயே குடும்பத் தொழிலை எடுத்துக் கொண்டவர் . அவர் படிக்காதவர் என்பதால் அவரது தாயார் கோதை அவருக்கு ஒரு படித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். 

Nakshatra Deepak Thamizhum Saraswathiyum VijayTV launch

இதில் சரஸ்வதியாக நடிகை நக்ஷத்ரா நடிக்கிறார்.  அவர் பல்வேறு சேனல்களுக்காக ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார், மேலும் அவர் ‘ஆஸ்  ஐம் ஸபரிங் ஃபிரம் காதல்’ (As I’m suffering from Kadhal) என்ற ஹாட்ஸ்டார் வலைத் தொடரிலும் எண்ணற்ற குறும்படங்களிலும் நடித்தவர்.

Nakshatra Deepak Thamizhum Saraswathiyum VijayTV launch

தமிழாக தீபக் நடிக்கிறார். தீபக், ஸ்டார் விஜய் சேனலின் செல்லப்பிள்ளைதான்.  மீண்டும் திரும்பியுள்ளார். ஜோடி நம்பர் 1, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக சேனலுடன் மிக நீண்ட கால உறவைக் கொண்டிருந்தார், முன்னணி சீரியல்களிலும் அவர் பல பாத்திரங்களைச் செய்துள்ளார்.

தவிர, கோதையாக மீரா கிருஷ்ணன் (தமிழின் தாய்), நடேசனாக ராமச்சந்திரன் (தமிழின் அப்பா), சொக்கலிங்கமாக பிரபு (சரஸ்வதியின் அப்பா), சந்திரலேகாவாக ரேகா (சரஸ்வதியின் அம்மா), வசுந்தராவாக தர்ஷனா, மேலும் பலர் இந்த தொடரில் நடிக்கின்றனர்.

தமிழும் சரஸ்வதியும் தொடரை இயக்கியுள்ளவர் எஸ். குமரன்.  தொலைக்காட்சி துறையின் மிகவும் பிரபலமான இயக்குநர்.  இந்த சீரியலை விகடன் விஸ்டா தயாரிக்கிறது.

Nakshatra Deepak Thamizhum Saraswathiyum VijayTV launch

இதற்கு முன் பார்த்திராத ஒரு பொழுதுபோக்கு குடும்ப நாடகமாக இருக்கும் என்று கூறப்படும் இந்த தொடர், 2021 ஜூலை 12 அன்று ,முதல் STAR VIJAY டிவியில் திங்கள் - வெள்ளி, இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: "கதை கேக்கும் போதே மிரண்டுட்டேன்"!! ஹன்சிகா நடிக்கும் புதிய த்ரில்லர் படம்! டைட்டில் இதுதான்!

Nakshatra Deepak Thamizhum Saraswathiyum VijayTV launch

People looking for online information on Bhagyalakshmi, Bharathi Kannamma, Deepak, Nakshatra Nagesh, Pandian stores, Raja Rani, ThamizhumSaraswathiyum, VijayTelevision will find this news story useful.