Bharathi Kannamma: சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த புது கேரக்டர்.. வெண்பாவுக்கு ஹீரோவா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் பிரபலமான ஒன்று 'பாரதி கண்ணம்மா'.

bharathi kannamma new pair for venba promo viral

Also Read | "என்னோட உயிரின் உயிரே பிரிஞ்சிடுச்சு.." பிரபல பாடகர் மறைவால் உடைந்து போன ஹாரிஸ் ஜெயராஜ்

இதில் முதன்மை கதாபாத்திரங்களான பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர், கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில், சில கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அப்படி ஒரு சூழ்நிலையில், மனைவி இல்லாமல் தனியாக வாழும் பாரதியை அடையத் துடிக்கிறார் வெண்பா. இதற்காக, பல சதித் திட்டங்களையும் தீட்டி, பாரதி மற்றும் கண்ணம்மா பிரிவை நிரந்தரம் ஆக்கவும் முடிவு செய்திருந்தார்.

அடுத்தடுத்து புது என்ட்ரி

மேலும், பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோருக்கு, பிறந்த இரண்டு குழந்தைகளான ஹேமா மற்றும் லட்சுமி ஆகியோர், தனித்தனியாக தந்தை மற்றும் தாயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே, பாரதி மருத்துவராக பணிபுரியும் மருத்துவமனையில் வேலைக்கு செல்கிறார் கண்ணம்மா.  இவர்களின் கதை ஒருபுறம் போய்க் கொண்டிருக்க, திடீர் திடீர் என புதிய கதாபாத்திரங்கள், பாரதி கண்ணம்மா தொடரில் என்ட்ரி கொடுத்தனர்.

bharathi kannamma new pair for venba promo viral

தீர்மானமாக இருக்கும் ரேகா

பாரதியின் தாய் மற்றும் தந்தையுடன் கல்லூரியில் உடன் படித்த நண்பராக விக்ரம் என்னும் கதாபாத்திரத்தில், நடிகர் பரத் கல்யாண் உள்ளே வந்தார். இதன் பின்னர், வெண்பாவின் தாயாக பிரபல நடிகை ரேகாவும் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். பாரதி தான் வேண்டும் என வெண்பா அடம் பிடித்துக் கொண்டிருக்க, எப்படியாவது அவர் மனதை மாற்றி வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் ரேகா.

bharathi kannamma new pair for venba promo viral

ரவுடியிடம் சிக்கும் வெண்பா

இப்படியாக, அடுத்துடுத்து, நிறைய திருப்புமுனைகள் பாரதி கண்ணம்மா தொடரில் நடக்க, தற்போது புதிதாக ஒருவர் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோவின் படி, பார்க் ஒன்றில் வைத்து, ரவுடி கும்பலிடம் வெண்பா சிக்கிக் கொள்கிறார்.

"இவரு தான் வெண்பா ஜோடி போல"

அந்த சமயத்தில், ஹீரோ போல என்ட்ரி கொடுக்கும் நடிகர், ரவுடிகளை அடித்து துவைத்து, வெண்பாவை காப்பாற்றவும் செய்கிறார். தனக்கு செய்த உதவிக்காக, நன்றி கூறி மறுநாள் லஞ்ச்சிற்கும் அழைக்கிறார் வெண்பா. இதன் பின்னர், அவரும் வீட்டிற்கு வர, தாயிடம் இவர் தான் என்னை காப்பாற்றிய நண்பர் என வெண்பா அறிமுகம் செய்து வைக்கிறார்.

bharathi kannamma new pair for venba promo viral

அப்போது, வெண்பா எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று அங்கே அரங்கேறுகிறது. "உன் நண்பர் ரோஹித் தான் நான் உனக்கு பார்த்து இருக்குற மாப்பிள்ளை" என ரேகா கூற, ஒன்றும் புரியாமல் குழம்பிய படி நிற்கிறார் வெண்பா. இதனால், இனிமேல் இவர் தான் வெண்பாவின் ஜோடியாக இருக்கலாம் என்றும், அடுத்து பாரதி கண்ணம்மா தொடர் எப்படி நகரும் என்பது பற்றியும், தொடரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

bharathi kannamma new pair for venba promo viral

Also Read | "டியர் KK, ஏன் இவ்ளோ அவசரம்?".. பாடகரின் திடீர் மரணத்தால் கலங்கிய ஏ.ஆர். ரஹ்மான்..

தொடர்புடைய இணைப்புகள்

bharathi kannamma new pair for venba promo viral

People looking for online information on Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial Today, Bharathi Kannamma Serial today episode, Vijay Television will find this news story useful.