“ஏங்க நான் நடிச்ச படம் எதுவுமே பாத்ததில்லையா…” பிரியங்காவுக்கு செம்ம counter கொடுத்த கமல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது.

Kamal jolly counter to anchor priyanka

Also Read | பாடகர் KK பாடிய கடைசி தமிழ் பாடல்… ‘தி லெஜண்ட்’ பட இயக்குனர்கள் பகிர்ந்த வீடியோ

விக்ரம் ரிலீஸ்…

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில்  உருவாகி வரும் ‘விக்ரம்’திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்காண்டு இடைவெளியில் கமலின் அடுத்த படமாக இந்த திரைப்படம் ரிலீஸாவதால் படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில் நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே செல்கிறது.

Kamal jolly counter to anchor priyanka

கமல் தொடர் ப்ரமோஷன்…

இந்த படத்துக்காக நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து பல இடங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். இதுவரை சென்னை, கொச்சி, ஐதராபாத், டெல்லி, மலேசியா, துபாய் ஆகிய பகுதிகளுக்கு சென்று நேரடியாக ரசிகர்கள் மற்றும் ஊடகங்களை சந்தித்து படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டார். அதுபோலவே பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்துக் கலந்துகொண்டார். விஜய் தொலைக்காட்சியில் விக்ரம் ஸ்பெஷல், மலையாள பிக்பாஸ் மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆகியவற்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

Kamal jolly counter to anchor priyanka

சூப்பர் சிங்கர் …

இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்ட அவரிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்கா “சும்மா, ஹேர்ஸ்டைல் மாத்திக்கணும், ஹேர் கலர் பண்ணிக்கனும், ஸ்டைல் மாத்திக்கணும்… அப்படிலாம் எதுவுமே பண்ண மாட்டீங்களா சார்… எப்ப பாத்தாலும் வேல வேலன்னு இருப்பீங்களா சார்” எனக் கேட்க, கமல் அவரிடம் ‘நான் நடிச்ச படம் எதுவுமே பாத்ததில்லியா நீங்க” என்று ஜாலியாக சொல்ல, ரசிகர்கள் ஆரவாரம் செய்து கமலின் counter-ஐ ரசித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Also Read | “ரெண்டு நாளைக்கு No ஃபோன்… No இண்டர்நெட்”… என்ன சொல்றாரு A.R.ரஹ்மான் வைரலாகும் பதிவு

 

தொடர்புடைய இணைப்புகள்

Kamal jolly counter to anchor priyanka

People looking for online information on Anchor priyanka, Kamal Haasan, Kamal jolly counter, Vikram Movie will find this news story useful.