இரண்டாவது முறையாக இணைந்த பரத் & வாணி போஜன் … மிரட்டலான போஸ்டரோடு வெளியான Title

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பரத் வாணிபோஜன் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகும் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Bharath vani bhojan new movie first look and Title

Also Read | “ரெண்டு நாளைக்கு No ஃபோன்… No இண்டர்நெட்”… என்ன சொல்றாரு A.R.ரஹ்மான் வைரலாகும் பதிவு

பரத் 50….

இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் பரத். அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படமாக பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படம் அமைந்தது. அதன் பின்னர் எம்டன் மகன், கண்டேன் காதலை, பழனி உள்ளிட்ட  பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். சமீபத்தில் பாலிவுட்டில் சல்மான் கான் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து பாலிவுட்டிலும் கால்பதித்தார். ஹீரோவாக மட்டும் இல்லாமல் செல்லமே மற்றும் ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

Bharath vani bhojan new movie first look and Title

LOVE

திரைத்துறையில் நடிகராக தனது பயணத்தை தொடங்கி பல வெற்றி படங்களை அளித்த நடிகர் பரத் நடிக்கும் 50வது படமான “LOVE”  படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. திரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். R P பிலிம்ஸ் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது. விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Bharath vani bhojan new movie first look and Title

மீண்டும் இணைந்த பரத் வாணி போஜன்…

இந்நிலையில் LOVE படத்துக்குப் பிறகு மீண்டும் வாணிபோஜன் – பரத் கூட்டணி இணைந்துள்ளனர். தற்போது அந்த படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன. ‘மிரள்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் சக்திவேல் இயக்குகிறார். ராட்சசன் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி டில்லி பாபு, சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறார். படத்தின் போஸ்டரைக் கொண்டு பார்க்கும் போது திரில்லர் படமாக இருக்கும் என தெரிகிறது.

Also Read | “ஏங்க நான் நடிச்ச படம் எதுவுமே பாத்ததில்லையா…” பிரியங்காவுக்கு செம்ம counter கொடுத்த கமல்

தொடர்புடைய இணைப்புகள்

Bharath vani bhojan new movie first look and Title

People looking for online information on பரத், வாணி போஜன், Bharath, Vani Bhojan, Vani bhojan new movie will find this news story useful.