ஒன்றரை மணிநேர Deadline… இதயத்தோடு பயணிக்கும் மருத்துவக்குழு… பாரதி கண்ணம்மா சீரியலில் பரபரப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன.

Bharathi kannamma serial heart transplantation episode

Also Read | "இதுக்காகவே சில மாதம் வெயிட் பண்ணேன்.. கடைசில”… Birthday-வில் சாய் பல்லவி surprise!

பாரதி கண்ணம்மா…

விஜய் டிவி சீரியல்களுள் முக்கியமான சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல். இதில் பாரதியாக அருண் பிரசாத்தும் கண்ணம்மாவாக ரோஷினியும் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் அபிமானத்தைப் பெற்ற இந்த தொடர் இதுவரை 700க்கும் மேற்பட்ட எபிசோட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பாரதி கண்ணம்மா தம்பதிகளின் குழந்தைகளான ஹேமா, பாரதியிடம் தத்துப் பிள்ளையாகவும், குழந்தை லக்ஷ்மி கண்ணம்மாவிடம் நேரடி மகளாகவும் வளர்கின்றனர். கண்ணம்மாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக பாரதி தவறாக புரிந்துகொண்டதால் இந்த பிரிவு ஏற்பட்டுள்ளது.

Bharathi kannamma serial heart transplantation episode

பாரதி கண்ணம்மா பிரிவு…

ஆனால், இதில் ஹேமா பற்றிய உண்மையை பாரதியிடம் போட்டுடைத்த கண்ணம்மா, “குழந்தை ஹேமா எனது 2வது குழந்தை தான். அதாவது நம் குழந்தை தான்” என சொல்ல, அதிர்ச்சி அடைவார் என எதிர்பார்க்கப்பட்ட பாரதி, சற்றும் அதிராமல், கண்ணம்மா பொய் சொல்லி குழந்தையையும் தன்னையும் பிரிக்க முயல்வதாக கோபத்தில் திட்டிவிடுகிறார். மேலும் உண்மையைப் பேசினார் பாரதியின் அம்மாவும் தன் மாமியாரிடம் பாரதி கோபித்துக் கொள்வான் என கண்ணம்மா மேற்கொண்டு பேசாமல் விட்டுவிட்டார். அதையடுத்த  சமீபத்திய எபிசோட்களில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் அரங்கேறி பார்வையாளர்களின் பல்சை எகிற வைத்துள்ளது.

Bharathi kannamma serial heart transplantation episode

இதற்கிடையில் வெண்பா எப்படியாவது பாரதியை அடைய வேண்டும் என்று பல வழிகளில் முயன்று வருகிறார். அதற்கு முட்டுக்கட்டை போடும் கதாபாத்திரத்தில் வெண்பாவின் அம்மாவாக பிக்பாஸ் ரேகா வந்து கலக்கி வருகிறார். இதற்கிடையில் தற்போது வெண்பா ஒரு வழக்கில் கைதாகி சிறைக்கு செல்ல, பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள பாரதி கண்ணம்மா சீரியல்.

Bharathi kannamma serial heart transplantation episode

இதய மாற்று அறுவை சிகிச்சை…

இந்நிலையில் தற்போது பாரதியின் தலைமையில் இதயமாற்று அறுவை சிகிச்சை நடந்து அது ஒரு சிறுமிக்கு மாற்றப்பட வேண்டிய நிலையில், இதயத்தை எடுத்து செல்ல விமானம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அந்த நேரத்தில் வானிலை மோசமாகி, புயல் வீச, வேறு வழியில்லாமல் சாலை மார்க்கமாக கொண்டு செல்கிறார்கள். வெற்றிகரமாக இதயத்தைக் கொண்டு சென்றார்களா? அறுவை சிகிச்சை நடந்ததா என்பது பற்றிய எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விதமாக தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் அடுத்தடுத்த எபிசோட்கள் பார்க்கும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ஒன்றரை மணிநேர DEADLINE… இதயத்தோடு பயணிக்கும் மருத்துவக்குழு… பாரதி கண்ணம்மா சீரியலில் பரபரப்பு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi kannamma serial heart transplantation episode

People looking for online information on Bharathi kannamma heart transplantation episode, Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial Promo, Bharathi Kannamma Serial Today, Bharathi Kannamma Serial today episode will find this news story useful.