ET Others
www.garudabazaar.com

திமிர் பேச்சு.. நக்கலுடன் சவால் விடும் வெண்பா.. அதுவும் யாருகிட்ட?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்று 'பாரதி கண்ணம்மா'.

venba arrogant speech and challenge in bharathi kannamma serial

"சீக்கிரமா ஆரம்பிச்சுடலாம்.." விருப்பப்பட்ட 'இசைப்புயல்'.. கிரீன் சிக்னல் காட்டிய 'இசைஞானி'

இந்த தொடரின் நாயகன் மற்றும் நாயகியான பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல், இவர்கள் இருவரின் குழந்தையான ஹேமா, பாரதியிடம் தத்துப் பிள்ளை போன்றும், மற்றொரு குழந்தை லட்சுமி, கண்ணம்மாவிடம் நேரடி மகள்களாவும் வளர்ந்து வருகின்றனர்.

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்

கடந்த சில எபிசோடுகளுக்கு முன்பு, ஹேமாவும் தங்களின் மகள் தான் என கண்ணம்மா தெரிவித்த போதும், நீ பொய் சொல்கிறாய் என பாரதி கோபத்தில் கூறியிருந்தார். இது ஒருபுறம் இருக்க, லட்சுமியின் தந்தை யார் என்பது பற்றி கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவில் நடக்கும் நிகழ்வுகளும், ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் அடித்திருந்தது.

ஒரே போடு தான்

இவை அனைத்தையும் கண்டு கொண்டிருந்த வெண்பா, நிச்சயம் மிக உற்சாகத்தில் இருந்திருப்பார். அப்படி இருக்கும் நிலையில் தான், பள்ளிக்கூட காட்சி ஒன்றில், தலைமையாசிரியடம் கண்ணம்மா பேசும் போது, பாரதிக்கு செண்பா தங்கை போல என்றும், அவர்கள் இருவருக்கும் நிறைய வேலை இருக்கும் என்றும் ஒரே போடாக போட்டார்.

சவால் விடும் வெண்பா

இதனைக் கேட்டதும், செண்பாவின் முகம் மாறி போனது. பாரதியும் அங்கிருந்து எழுந்து வெளியே போய் விட்டார். குளிர் காய்ந்து கொண்டிருந்த செண்பாவிற்கு, கண்ணம்மாவின் பதிலால் சரியான பல்பு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போதைய ப்ரோமோ ஒன்றில், பாரதியின் அம்மாவான சௌந்தர்யாவிடம் சவால் விட்டுள்ளார் வெண்பா.

venba arrogant speech and challenge in bharathi kannamma serial

குட் கேர்ள் ஆண்ட்டி

"நான் ரொம்ப குட் கேர்ள் ஆண்ட்டி. நீங்க மட்டுமில்ல, எல்லாரும் என்ன தப்பா நினைக்குறாங்க" என சவுந்தர்யாவிடம் வெண்பா கேட்கிறார்.

இதற்கு பதில் சொன்ன கண்ணம்மாவின் மாமியார், "ஆரம்பத்துல உன்ன பத்தி சரியா புரிஞ்சுக்கல. ஆனா, இப்போ தான் உன் குணத்தை பத்தி தெள்ள தெளிவா புரிஞ்சுக்கிட்டேன். நீ எதுக்காக இந்த மாதிரி எல்லாம் செய்யுறேன்னு எனக்கு தெரியல. ஆனா, உன் நோக்கம் நிறைவேறாது" என கூறுகிறார். மேலும், "நீ என்ன திட்டம் போட்டாலும், என்ன யுக்தி பண்ணாலும் அத நான் முறியடிப்பேன்" என்றும் தெரிவிக்கிறார்.

திமிர் பேச்சு

இதனைக் கேட்ட வெண்பா, தான் பயம் கொள்ளவது போல, நாடகத்தன்மையான முக பாவனைகளை காட்டுகிறார். "யார் யாரோ என்ன காலி பண்ணனும்னு பாத்தாங்க. ஆனா அவங்க தான் காலி ஆனாங்க. அது தானே இந்த கண்ணம்மாவோட ஹிஸ்டரில் நடந்திருக்கு. இப்போ நீங்க வந்துருக்கீங்க. பாப்போம் என்ன நடக்குதுன்னு. You Know one thing. Love is Blind" என திமிராக பேசிக் கொண்டு வெண்பா கடந்து செல்கிறார்.

venba arrogant speech and challenge in bharathi kannamma serial

இந்த ப்ரோமோவைக் காணும் ரசிகர்களோ, வெண்பா தான், பாரதி கண்ணம்மா ஹிஸ்டரியில் அதிகம் பல்பு வாங்கி இருக்கிறார் என்பதை குறிப்பிட்டு, பல வேடிக்கையான கமெண்ட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கோபி சட்டையைப் பிடித்து உலுக்கிய பாக்கியலட்சுமி - அடுத்து என்ன நடக்க போகுது?

தொடர்புடைய இணைப்புகள்

venba arrogant speech and challenge in bharathi kannamma serial

People looking for online information on Bharathi Kannamma, Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial Episode, Venba, Vijay Television will find this news story useful.