RRR Others USA
www.garudabazaar.com

KGF Chapter 2 டிரெய்லரை புகழ்ந்து தள்ளிய பீஸ்ட் இயக்குனர் நெல்சன்..! வைரலாகும் லேட்டஸ்ட் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’.

Beast Director Nelson Dhilipkumar about KGF Chapter 2 Trailer

இந்த படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இதனையடுத்து பெங்களூரூவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது.

Beast Director Nelson Dhilipkumar about KGF Chapter 2 Trailer

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

‘கேஜிஎப் சாப்டர் 2‘ படத்தின் தமிழ் பதிப்பு முன்னோட்டத்தை பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

Beast Director Nelson Dhilipkumar about KGF Chapter 2 Trailer

பட்த்தின் டிரெய்லர் வெளியாகி மிகப்பெரிய அளிவில் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இந்நிலையில் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் கேஜிஎப் 2 பட டிரெய்லரை பாராட்டி உள்ளார். டிரெய்லர் குறித்த டிவிட்டில் "இது பிரமாண்டமாகவும் வெளிச்சமாகவும் இருக்கிறது 🔥🔥 ப்டத்தை பார்க்க காத்திருக்க முடியாது KGF Chapter2 Trailer" என டிவீட் செய்துள்ளார்.

 

பீஸ்ட் படம் ஏப்ரல் 13 அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Beast Director Nelson Dhilipkumar about KGF Chapter 2 Trailer

People looking for online information on Beast, KGF, KGF Chapter2, Nelson Dhilipkumar, Vijay will find this news story useful.