RRR Others USA
www.garudabazaar.com

திரும்பவுமா? விஜய் தேவரகொண்டா - பூரி ஜெகன்னாத் மாஸ் கூட்டணி… செம போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தேவாரகொண்டா பூரி ஜெகன்னாத் கூட்டணியில் ஏற்கனவே லைகர் திரைப்படம் உருவாகி வரும் நிலையில் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.

Vijay devarakonda and puri jagannath next movie announcement

லைகர் கூட்டணி…

தெலுங்கு திரையுலகின்  இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடித்துள்ள LIGER ( saala Crossbreed ) படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.. குத்து சண்டை வீரர் மைக் டைசன், LIGER படத்தில்  ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’  எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், அவர் நடிக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தினை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் சார்பில்  பூரி ஜெகன்நாத், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான உருவாக்கியுள்ளனர்.  மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Vijay devarakonda and puri jagannath next movie announcement

மீண்டும் இணைந்த கூட்டணி….

பலமொழிகளில் பிரபலமான இந்திய நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டா, கலக்கல் கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகிய இருவரும் லைகர் படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இருவரும் தற்போது அவர்களின் கூட்டணியில், பல மொழிகளில் உருவான பேன் இந்தியா படமான ‘லைகர்’ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள். இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது.

வித்தியாசமான போஸ்டர்…

இந்த அதிரடியான கூட்டணியில், புதிய படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்  பல வெடிபொருள் ஆயுதங்களுன் படு ஸ்டைலீஷாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில்: 14:20 மணிநேரம்- 19.0760° N, 72.8777° E - அடுத்த மிஷன் வெளியீடு 29-03-2022. என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு  பெரிய விருந்து காத்திருக்கிறது, நாளை ஒரு உற்சாகமான அறிவிப்பு வெளிவரவுள்ளது. மிகப்பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படைப்பின் மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Vijay devarakonda and puri jagannath next movie announcement

தொடர்புடைய இணைப்புகள்

Vijay devarakonda and puri jagannath next movie announcement

People looking for online information on Liger, Puri Jagannath, Vijay Devarakonda will find this news story useful.