RRR Others USA
www.garudabazaar.com

”KGF 2-க்கும் பீஸ்ட்-க்கும் போட்டி இல்லை…” விஜய் ரசிகர்களை கவர்ந்த யாஷின் பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேஜிஎப் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் யாஷ் பேசியது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது

Actor yash clarified fans beast vs KGF 2 release

விஜய் நெல்சன் கூட்டணி பீஸ்ட்

நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நடிக்கும் பீஸ்ட் படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே இந்த படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது.

வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது. இந்த படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஹிட் ஆகின. இந்த படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor yash clarified fans beast vs KGF 2 release

கேஜிஎப் 2…

2018 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் உருவாகி இந்தியா முழுவதும் வெற்றியடைந்த படம் KGF. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ்,ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வசூல் சாதனை படைத்த நிலையில் கன்னட மொழி தாண்டியும் அனைத்து மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்படும் படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இரண்டாம் பாகத்தில் யாஷுடன்  சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகண்டூர் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் இந்த படத்தில் சஞ்சய் தத் அதிரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால் பாலிவுட்டிலும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Actor yash clarified fans beast vs KGF 2 release

ரசிகர்களைக் கவர்ந்த் யாஷ்…

இந்நிலையில் நேற்று மாலை கேஜிஎப் 2 டிரைலர் ரிலீஸ் மிக பிரம்மாண்டமாக நடந்தது. நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய யாஷின் பேச்சு விஜய் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அவரது பேச்சில் ‘இது கேஜிஎவ் vs பீஸ்ட் போட்டியல்ல. கேஜிஎப் with பீஸ்ட். இது தேர்தல் அல்ல. சினிமா. விஜய் சார் மிகப்பெரிய நடிகர். நான் கண்டிப்பாக பீஸ்ட் பார்ப்பேன். அதே போல விஜய் சாரின் ரசிகர்களுக்கும் கேஜிஎப் பிடிக்கும் என நம்புகிறேன். நாம் இணைந்து இந்த இரு படங்களையும் கொண்டாடுவோம்’ எனக் கூறியுள்ளார். யாஷின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Tags : Yash, Beast, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Actor yash clarified fans beast vs KGF 2 release

People looking for online information on Beast, Vijay, Yash will find this news story useful.