RRR Others USA
www.garudabazaar.com

VIDEO: திவ்யபாரதி.. மாலத்தீவில் அரபிக்குத்து டான்ஸ்.‌. ஜாலியோ ஜிம்கானா பண்றாங்கப்பா.. !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாலத்தீவு : பீஸ்ட் அரபிக்குத்து பாடலுக்கு நடிகை திவ்யபாரதி இரண்டாம் முறையாக செம்ம் ஜாலியாக நடனமாடியுள்ளார்.

dhivya Bharathi Beast Arabic Kuthu Dance Second Time

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

dhivya Bharathi Beast Arabic Kuthu Dance Second Time

இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 5 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 13 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக் உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர். 

dhivya Bharathi Beast Arabic Kuthu Dance Second Time

இந்நிலையில்  திவ்ய பாரதி 2-வது முறை அரபிக்குத்து பாடலுக்கு கடற்கரையில் ஜாலி நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் டிரெண்ட் ஆகி உள்ளது. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் Bachelor. இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளவர் திவ்யபாரதி.

dhivya Bharathi Beast Arabic Kuthu Dance Second Time

கோடை விடுமுறைக்கு மாலத்தீவு சென்ற நடிகை திவ்யபாரதி அங்கிருந்து பல போட்டோஸ், வீடியோக்களை வெளியிட்டார். அதில் குறிப்பாக பிகினி உடையில் உள்ள போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ததன. திவ்யபாரதி, தனது நண்பர்களுடன் கோகோ கிரி தீவில் இருந்து பிகினி & நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டார்.

VIDEO: திவ்யபாரதி.. மாலத்தீவில் அரபிக்குத்து டான்ஸ்.‌. ஜாலியோ ஜிம்கானா பண்றாங்கப்பா.. ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

dhivya Bharathi Beast Arabic Kuthu Dance Second Time

People looking for online information on Arabic Kuthu, பீஸ்ட், Beast, Dhivya Bharathi will find this news story useful.