RRR Others USA
www.garudabazaar.com

பீஸ்ட் வெறித்தனம் overloaded… வெளியானது 5 மொழிகளின் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இப்போது அதன் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

Sun pictures released beast all lanuguages poster

"மார்வெல் டிசி போல சூப்பர் ஹீரோ அதிரா"… RRR படக்குழு வெளியிட்ட வைரல் பர்ஸ்ட் லுக்

பீஸ்ட் கலைஞர்கள்..

நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நடிக்கும் பீஸ்ட் படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே இந்த படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது.

Sun pictures released beast all lanuguages poster

அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா ஹிட்ஸ்….

இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன.  அதுபோல படத்தில் இருந்து இதுவரை வெளியாகியுள்ள இரண்டு பாடல்கள் வைரல் ஹிட் ஆகியுள்ளன. முதல் சிங்கிளான அரபிக்குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14 அம் தேதி வெளியாகி இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. இதுவரை யுடியூபில் இந்த பாடலை 200 மில்லியன் பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.

Sun pictures released beast all lanuguages poster

அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலர் இந்த பாடலுக்கு தங்கள் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலும் ரசிகர்களின் மனம்கவர்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. இந்த பாடலை விஜய் பாடியுள்ளார்.

Sun pictures released beast all lanuguages poster

பீஸ்ட் from ஏப்ரல் 13

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக சில தினங்களுக்கு  தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்  தங்கள் ட்விட்டர் பக்கத்தில்  ஏப்ரல் 13 ஆம் தேதி, பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்போடு கையில் துப்பாக்கியுடன் விஜய் இருக்கும் புதிய போஸ்டரையும் வெளியிட்டது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் தற்போது எதிர்பார்ப்பை அதிமமாக்கியது. வருகிறது. தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒருநாள் முன்னதாக புதன் கிழமை பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது.

Sun pictures released beast all lanuguages poster

பேன் இந்தியா ரிலீஸ்..

பீஸ்ட் படத்தின் ஒட்டு மொத்த கர்நாடக தியேட்டர் வெளியீட்டு உரிமையை தீரஜ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படம், தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸாகிறது.

Sun pictures released beast all lanuguages poster

ஐந்து மொழி போஸ்டர்

இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த நிலையில் இப்போது ஐந்து மொழிகளின் அதிகாரப்பூர்வ போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ஸர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

"இனி நீங்க மகாராஜமௌலி" வாவ்.. RRR பாத்துட்டு இயக்குநர் ஷங்கர் போட்ட செம பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Sun pictures released beast all lanuguages poster

People looking for online information on Anirudh Ravichander, Beast, Nelson Dilipkumar, Pooja Hegde, Redin Kingsley, Sun pictures, Vijay will find this news story useful.