RRR Others USA
www.garudabazaar.com

KGF 2 -ல் நடந்த முக்கிய மாற்றம்… டிரெய்லரில் இத கவனிச்சீங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

KGF 2 ட்ரைலர் நேற்று நான்கு மொழிகளில்  வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Actor ananth nag replace by Prakash raj in KGF 2

கேஜிஎப் வெற்றி

2018 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் உருவாகி இந்தியா முழுவதும் வெற்றியடைந்த படம் KGF. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ்,ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் இந்திய மொழிகளில் ஹிட்டான கேஜிஎப், ஓடிடியில் வெளியான போது மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்று பட்டி தொட்டியெங்கும் கலக்கியது.. இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

மேலும் பிரம்மாண்டமாய்..

இரண்டாம் பாகத்தில் யாஷுடன்  சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை அன்பறிவு இரட்டையர்கள் இயக்கி உள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகண்டூர் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் இந்த படத்தில் சஞ்சய் தத் அதிரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால் பாலிவுட்டிலும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Actor ananth nag replace by Prakash raj in KGF 2

ஏப்ரல் 14 ஆம்  தேதி கேஜிஎப் 2 ரிலீஸ்க்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் சில தினங்களுக்கு TOOFAN என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திய ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த பாடல் யுடியூபில் வைரல் ஹிட் ஆகி சாதனை படைத்து வருகிறது.

பிரம்மண்டமாக ரிலிஸ் ஆன டிரெய்லர்

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக நேற்று இந்த படத்தின் டிரைலர்  4 மொழிகளிலும் வெளியானது. பாகம் ஒன்றை போலவே மாஸாக வெகுஜன ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த டிரைலரில் ஒரு விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Actor ananth nag replace by Prakash raj in KGF 2

முதல் பாகத்தில் கேஜிஎப் மற்றும் ராக்கியின் கதையை சொல்லும் எழுத்தாளர் கதபாத்திரத்தில் கன்ண்ட நடிகர் அனந்த் நாக் நடித்திருந்தார். ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பாத்திரமாக அது அமைந்தது. இந்நிலையில் இப்போது இரண்டாம் பாகத்தில் கதை சொல்லும் பாத்திரமாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். டிரைலரில் அவர் சம்மந்தமான காட்சிகளும் அவரே  கதை சொல்லும் விதமாகவும் காட்சிகள் அமைந்துள்ளன. இது ரசிர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor ananth nag replace by Prakash raj in KGF 2

People looking for online information on KGF2, Prakash Raj, Yash will find this news story useful.