RRR Others USA
www.garudabazaar.com

ஆசிரியர்களை கௌரவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்! என்ன செஞ்சிருக்காங்க பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அவ்வப்போது சமூகநலப்பணிகளை செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

Vijay makkal iyakkam honoured teacher viral pic

விஜய்யின் மக்கள் இயக்கம்…

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் 13 ஆம் தேதி பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர் மனறங்களை ஒருங்கிணைத்து விஜய்யின் மக்கள் இயக்கம் என்ற பெயரில் சமூக நல சேவைகளை செய்யும் இயக்கமாக உருவாக்கியுள்ளார். இந்த இயக்கத்தின் மூலம் நற்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள். தற்போது இந்த இயக்கத்தின் பணிகளை புஸ்ஸி ஆனந்த் கவனித்து வருகிறார்.

Vijay makkal iyakkam honoured teacher viral pic

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கம்….

தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என 12,838 பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட விஜய்யின் மக்கள் இயக்க உறுப்பினர்கள் கணிசமான இடங்களில் வெற்றியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களைக் கௌரவித்த மக்கள் இயக்கத்தினர்…

இந்நிலையில் தற்போது  "தளபதி" மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி மூலமாக அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் சாதனையாளர்களை உருவாக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்தி நினைவு பரிசுகளை வழங்கினர்.  இந்த நிகழ்வை அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து Ex.MLA அவர்கள் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில்  துவக்கிவைத்தார். மேலும் இதனை தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்டங்களில் உள்ள மாநில தலைமை, மாவட்ட தலைமை, அணி தலைமை, நகரம், ஒன்றியம், பகுதி சார்பில் இத்திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டது.

Vijay makkal iyakkam honoured teacher viral pic

Vijay makkal iyakkam honoured teacher viral pic

People looking for online information on Makkal Iyakkam, Thalapathi vijay will find this news story useful.