இது எப்ப?.. "சமையல் அம்மா"-க்கு பிறகு பாரதி கண்ணம்மாவில் ட்ரெண்ட் ஆகும் புது வார்த்தை ..
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' தொடர், அதன் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பான எபிசோடுகளுடன் சென்று கொண்டிருக்கிறது.
அது மட்டுமில்லாமல், எபிசோடு காட்சிகளை போல ப்ரோமோக்களும் அதிகம் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் அமைந்து வருகிறது.
பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஹேமா மற்றும் லட்சுமி ஆகிய குழந்தைகளும், தனித் தனியாக முறையே பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோருடன் வளர்ந்து வருகின்றனர்.
பாரதி தான் என் அப்பா..
இதில், இரண்டு குழந்தைகளுக்கும் தங்களின் பெற்றோர்கள் குறித்த சரியான விவரங்கள் எதுவும் தெரியாமல் இருந்து வந்தது. அந்த சமயத்தில், தன்னுடைய தந்தை யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம், லட்சுமிக்கு உருவானது. தனக்கு கிடைத்த ஆதாரத்தின் படி, இத்தனை நாட்கள் அங்கிள் என அழைத்த பாரதி தான் தந்தை என்ற உண்மை, லட்சுமிக்கு தெரிய வருகிறது.
தங்கையாக ஏற்றுக் கொண்ட லட்சுமி
இதனால் ஆனந்த கண்ணீர் வடித்து உருகும் லட்சுமி, தந்தை பாரதியை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்தது, அவர் ஊட்டி விட சாப்பிட்ட காட்சிகள் எல்லாம், ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே போல, ஹேமாவிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் லட்சுமியும், பாரதி பற்றிய உண்மை தெரிய வந்த பிறகு, ஹேமாவை தன்னுடைய தங்கையாக ஏற்றுக் கொண்டார்.
என்ன பிளான்யா..
குழந்தைகள் இருவரும் இணைந்தது போல, பாரதி மற்றும் கண்ணம்மா ஆகிய இருவரும் விரைவில் இணைய வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாரதியை தந்தை என அழைக்க வேண்டி, மாஸ்டர் பிளான் ஒன்றை லட்சுமி போட்ட காட்சிகள், ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
ஹேமா மற்றும் லட்சுமி ஆகிய குழந்தைகளுடன் பாரதி தன்னுடைய வீட்டில் இருக்க, தயக்கத்துடன் பேச ஆரம்பிக்கிறார் லட்சுமி. "உங்கள டாக்டர் அங்கிள்'ன்னு கூப்டுறது எனக்கு பிடிக்கல" என லட்சுமி சொல்ல, "நீ என்னன்னு சொல்லி என்ன கூப்பிட போறே?" என பாரதி கேட்கிறார்.
இனிமே பாரதி டாக்டர் அங்கிள்..
இதற்கு லட்சுமி சொல்லும் பதில் தான், சிறப்பம்சமாக அமைந்துள்ளது. "நான் உங்கள டாக்டர் அப்பா ன்னு கூப்பிடவா?. எங்க அம்மா ஹேமாவுக்கு சமையல் பண்ணி தர்றதுனால, ஹேமா அவங்கள சமையல் அம்மான்னு கூப்பிடுறா. அதே மாதிரி எனக்கு உடம்பு சரி இல்லன்னா நீங்க தானே எனக்கு டாக்டரா இருந்து, மருந்து மாத்திரை எல்லாம் தர்றீங்க.. அப்போ நான் உங்கள டாக்டர் அப்பான்னு கூப்பிடக் கூடாதா?." என ஏக்கத்துடன் கேட்கிறார்.
பதில் சொல்ல முடியாமல் பாரதி யோசித்துக் கொண்டே இருக்க, லட்சுமி மற்றும் ஹேமா ஆகியோர் இணைந்து, 'டாக்டர் அப்பா' என சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். இதனைக் கவனித்து கொண்டே இருக்கும் பாரதியின் தாயாரும், மகிழ்ச்சி அடைகிறார். இறுதியில், பாரதியும், லட்சுமியின் ஆசைக்கு ஓகே சொல்ல, ஒட்டுமொத்த பாரதி கண்ணம்மா ரசிகர்களும் லட்சுமி குட்டிக்கு பாராட்டினை சொல்லி வருகின்றனர்.
தன்னுடைய தந்தை பாரதி தான் என்பது தெரிந்தும், அழைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த லட்சுமி, இன்று அசத்தல் ஐடியா ஒன்றைக் கண்டுபிடித்து அதில் வெற்றியும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Lakshmi And Hema New Promo Makes Barathi Kannamma Fans Emotional
- Baakiyalakshmi Ezhil See Father Gopi With Other Woman
- Police Case On Baakiyalakshmi Serial Truth Revealed
- Police Case On Baakiyalakshmi Serial Truth Revealed
- Barathi Kannamma Lakshmi Came To See Barathi In Hospital
- Barathi Kannamma Lakshmi Hears About The Truth From Kannamma
- Baakiyalakshmi Gopi Reaction After Baakiya Beats Her Son
- Barathi Kannamma Lakshmi Hears About The Truth From Kannamma
- Baakiyalakshmi Gopi Reaction After Baakiya Beats Her Son
- Baakiyalakshmi Gopi Acting To Radhika In Video Call
- Hema Tells Bharathi Kannamma Marriage Plan To Lakshmi
- Hema Tells Bharathi Kannamma Marriage Plan To Lakshmi
தொடர்புடைய இணைப்புகள்
- HEY KANNAMMA, இங்க பாரு, உன் கொழுந்தன் LIVE வந்துருக்காரு...Bharathi Kannamma
- “ச்சே... இவங்களுக்கெல்லாம் வேலை பாக்காதீங்க” யார சொல்றாங்க Kanmani? Bharathi Kannamma
- Ninaithale Inikkum | Zee Tamil Serial Promo | Mon-Fri 7:30 PM
- Kanmani Manoharan 😍போற போக்குல Cute-ஆ Video போட்டு போய்ட்டே இருக்காங்கய்யா..
- கண்ண மூடிட்டு வாங்க... 90's முத்தம் கொடுத்த Vinusha 😍 KISS Me 💋 HUG Me 🤗 SLAP Me | Bharathi Kannamma
- புது கண்ணம்மாவின் புது Look 😍 Vinusha New Look
- Bharathi Kannamma Serial-ஐ விட்டு Kanmani விலகிய காரணம் இதுவா? Vijay Tv | Serial
- "ஒல்லியா, Height-அ, Dark Skin-னால Reject ஆயிருக்கேன்., போடான்னு..." - Vinusha Devi Interview
- "இந்த பொண்ணு Kannamma-வா Set ஆகாதுன்னு சொல்லிட்டாங்க" - Vinusha Devi Interview | Bharathi Kannamma
- அட என்ன Bharathi Kannamma முடியுது முடியுதுனு... உண்மை இது தான் - Vinusha Devi Interview
- Roshni என் Performance பாத்து இப்படி சொல்லுவாங்கனு நினைக்கல - Vinusha Devi | Bharathi Kannamma
- "DNA Test எப்போ எடுப்பீங்க"... Bharathi-ஐ நச்சரிக்கும் Fans | Bharathi Kannamma