Kaateri logo top
www.garudabazaar.com

‘இந்த மனுசனா இது?’.. லேடி கெட்டப்பில் அடையாளமே தெரில.. தெறிக்கும் BB Jodigal 2 புது ப்ரோமோ.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் முதன்மையான நிகழ்ச்சியாக விளங்குவது பிக் பாஸ் நிகழ்ச்சி.

BB Jodigal 2 Raju Jayamohan viral female get up

Also Read | பிரபல OTT-யில் ரிலீசாகும் சாய் பல்லவி நடித்த 'கார்கி'.. எப்போ? எதுல?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, இதுவரை ஐந்து சீசன்களாக முடிவடைந்து இருக்கிறது. முன்னதாக கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் சிம்பு மற்றும் ரம்யா கிருஷ்ணன் சிலவேளைகளில் பிக் பாஸ் கட்சியை தொகுத்து வழங்கினார்கள்.

இதேபோல் 24 மணி நேரமும் நடக்கும் அனைத்தையும் ஒளிபரப்பு செய்யப்படும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய டிஜிட்டல் நிகழ்ச்சியாக பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசன் நடந்து முடிவடைந்து இருக்கிறது. தொலைக்காட்சியை பொறுத்திருந்து 5 சீசன்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் ஐந்தாவது சீசனில் ராஜூ ஜெயமோகன் வெற்றி பெற்றார்.

BB Jodigal 2 Raju Jayamohan viral female get up

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களை மையமாக வைத்து  விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ரம்யா கிருஷ்ணன் நடுவராக வீற்றிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா ராஜூ, தாமரைசெல்வி, ஆர்த்தி உள்ளிட்டோர் பங்கு பெறுகின்றனர்.

போட்டியாளர்களாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தத்தம் இணையருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடல், பாடல் செய்வது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றனர். இதேபோல் அமீர் மற்றும் பாவனி இருவரும் இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக சேர்ந்து நடனமாடி வருகின்றனர்.

BB Jodigal 2 Raju Jayamohan viral female get up

இந்த நிலையில்தான் தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் ஆண்கள் எல்லாம் பெண்கள் வேடமிட்டும், பெண்கள் எல்லாம் ஆண்கள் வேடமிட்டும் பெர்ஃபார்ம் செய்கின்றனர். இது தொடர்பான புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் ராஜூ மஞ்சள் புடவை அணிந்து மிஷ்கின் திரைப்படத்தில் வருவது போல், பாடலுக்கு நடனமாடிய வீடியோ வரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் வின்னரான ராஜூ, எப்போதும் தமக்கே உரிய காமெடி, கவுண்டர் பாணியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கலக்கி வந்தார். இதேபோல் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் அசத்தி வருகிறார்.

Also Read | "தயிர்சாதம் வாய்ல வெக்க முடியாது.. யூடியூப்க்கா சமைக்குறீங்க?" - அம்மாவை கேள்விகேட்ட சிறுமி 😂

தொடர்புடைய இணைப்புகள்

BB Jodigal 2 Raju Jayamohan viral female get up

People looking for online information on BB Jodigal, Bigg boss, Bigg Boss Tamil, Vijay tv will find this news story useful.