Yaanai

'சர்தார்' படத்துல Bigg Boss வின்னரா ? - அவரே தன் ஸ்டைலில் சொன்ன விளக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Is Bigg Boss Raju acting in sardar his Explanation

Also Read | "என் பையன் இறந்த மாதிரி இருக்கு..ஒண்ணுமே ஓடல'ங்க.." மீனா கணவர் மறைவால் கலங்கும் ஊர் மக்கள்

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதும் மக்கள் இடத்தில் பெரிய வரவேற்பு இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் முதல் 5 பாகங்களை தொகுத்து வழங்கினார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் எப்போது வருமென்று ரசிகர்கள் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒடிடி வெர்ஷன், அதாவது 24 மணி நேரமும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஓடக்கூடிய ஓடிடி, வெர்ஷன் பிரத்தியேகமாக ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பை கமலஹாசன், அந்த சமயத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பெயராக பிக்பாஸ் ஓடிடி என்று சூட்டியிருந்தனர்.

Is Bigg Boss Raju acting in sardar his Explanation

இந்த நிலையில் பிக்பாஸ் 5-வது சீசனில் வெற்றிபெற்ற ராஜூ குறித்த தகவல்கள் பரவி வருகின்றன. நடிகர் ராஜூ, நடிகராக மட்டுமல்லாமல், முன்னதாக விஜய் டிவியில் ஏவி ஸ்கிரிப்ட் எழுதி வந்தவர். பாக்யராஜின் உதவியாளரான இவர், பிக்பாஸிலும் சரி, இப்போதும் சரி, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னரும் சரி, மக்களை என்டர்டெயின் பண்ணுவதில் வல்லவராக இருக்கிறார்.

அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கிய ‘டான்’ திரைப்படத்தில் ராஜூ நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் நெகடிவ் ரோலில் இருந்ததால் இன்னும் கவனிக்கப்பட்டது, இந்த நிலையில் கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தில் ராஜூ இணைந்ததாக சில தகவல்கள் வந்தன. இது குறித்து தற்போது விளக்கி உள்ள ராஜூ, “இந்த செய்தி உண்மை அல்ல.. கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கிறது..” என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் பட குழுவினரை பாராட்டியும் இருக்கிறார் .

Is Bigg Boss Raju acting in sardar his Explanation

பிக்பாஸ் நிகழ்ச்சிகளின்போது பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன நடந்தாலும், எப்படியும் ரியாக்ட் பண்ணாமல், கோபப்படாமல், பொறுமையாக அவர்களுக்கு உண்டானதை எடுத்துச் சொல்லக்கூடிய பாங்கு ராஜூவுக்கு இருந்ததை மக்கள் பார்த்திருக்க கூடும். தற்பொழுது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை பிரியங்காவுடன் இணைந்து ராஜூ தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | ரசிகரின் பிறந்தநாள்.. தொலைபேசியில் அழைத்து வாழ்த்திய அஜித்! செம்ம வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Is Bigg Boss Raju acting in sardar his Explanation

People looking for online information on Bigg boss, Bigg Boss OTT, Bigg Boss Raju, Bigg Boss Tamil, Raju, Raju jeyamohan, Vijay Television will find this news story useful.