www.garudabazaar.com

புதிய படத்துல ஹீரோவாகும் மற்றுமொரு Bigg Boss பிரபலம்..? - இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தகவல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்து கொண்டவர் அபினய். ஜெமினி கணேசன் மற்றும் நடிகை சாவித்ரி ஆகியோரின் பேரனான இவர் பெரும் இந்திய கணிதமேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ராமானுஜராக நடித்திருக்கிறார்.

bigg boss abhinay becomes hero in new movie

Also Read | பிரபல ஓடிடிக்காக வெப்-சீரிஸில் நடிக்கும் பிரபல முன்னணி நடிகை! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் அந்த காலத்தில் நடிகை சாவித்திரியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தவர். அதன் பின்னர் ஜெமினி கணேசன் சாவித்ரி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் பேரனான அபினய், நடிகர் கமல்ஹாசனுக்கும் மிகவும் பரிச்சியமானவர்.

நடிகர் கமல்ஹாசனிடம், சாவித்ரி குறித்த உரையாடல்களை பிக் பாஸ் மேடையில் அபினய் நிகழ்த்தி இருக்கிறார். கமல்ஹாசனும் சாவித்ரியுடனான நிறைய உணவுப்பூர்வமான தருணங்களை விவரித்து இருக்கிறார். இந்த நிலையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டு போட்டியாளராக இருந்த அபினய் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கக் கூடிய செய்தியை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

bigg boss abhinay becomes hero in new movie

மேசன் மீடியா வழங்கும் ப்ராஜெக்ட் நம்பர் ஒன் என்கிற இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 15/7/2022 அன்று தொடங்கி இருக்கிறது. இப்படத்துக்கு சி.சத்யா இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் மற்ற தகவல்கள் விரிவாக வெளியாகலாம் என தெரிகிறது.

அண்மையில் பிக்பாஸ் போட்டியாளரான நிரூப், ரெயின்போ என்கிற புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கான பூஜை நடைபெற்றது. இதில் அபினய் கலந்து கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அபினய் நடிக்கக்கூடிய, புதிய திரைப்படத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றனர்.

bigg boss abhinay becomes hero in new movie

குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிநயுடன் பிக்பாஸில் இருந்த சக போட்டியாளர்கள், அபினயின் நண்பர்கள், அவருடைய உறவினர்கள் என பலரும் அவர் நடிக்கும் இந்த திரைப்படத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

Also Read | LIGER படத்தின் டிரெய்லர் ரிலீஸ்.. ஒரே நாளில் இரண்டு இடங்களில் விழா! களைகட்டும் அப்டேட்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss abhinay becomes hero in new movie

People looking for online information on Bigg Boss 5 Tamil, Bigg Boss OTT, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5 will find this news story useful.