www.garudabazaar.com

சேட்டை செய்த அமீர்.. செவுள்லயே விட்ட பாவனி.. செம்ம க்யூட்ப்பா இவங்க 🥰 BBJodigal 2

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் அமீர் மற்றும் பாவனி. பிக்பாஸில் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகியதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் நடனமாடி வருகின்றனர்.

bigg boss amir pavani cute reaction BB Jodigal 2 new promo

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு மக்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இதுவரை ஐந்து சீசன்கள் நிறைவடைந்து இருக்கின்றன. இந்த சீசன்களை கமலஹாசன், ரம்யா கிருஷ்ணன், சிம்பு ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர்.

bigg boss amir pavani cute reaction BB Jodigal 2 new promo

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை மையமாக வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்கிற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

bigg boss amir pavani cute reaction BB Jodigal 2 new promo

ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடுவராக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி கலந்து கொண்டு நடனமாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோவில் உள்ள பிக்பாஸ் ஐந்தாவது சீசன் டைட்டில் வின்னர் ராஜு மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் அபிஷேக் இருவரும், குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் பாடல் காட்சியை ரீ- கிரியேட் செய்து காமெடி செய்து கொண்டிருந்தனர்.

bigg boss amir pavani cute reaction BB Jodigal 2 new promo

அப்போது இந்தப் பாடலுக்கு ஏற்றார் போல் பாவனியிடம் அமீர் ரியாக்சன் கொடுக்க, பாவனி திருப்பி அமீரை செல்லமாக கன்னத்தில் அறைந்து விட்டார். பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கும் இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss amir pavani cute reaction BB Jodigal 2 new promo

People looking for online information on Bb jodigal 2, Bigg boss, Bigg Boss 5 Tamil, Bigg Boss jodigal 2, Bigg Boss OTT, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5 will find this news story useful.