Muthazhagu: காத்து வாக்குல 2 கல்யாணம்.. 2 மனைவிகளை சமாளிக்கும் பூமி.. "Top கியரில் போகும் முத்தழகு.."
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியல் தற்போது மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

காரணம் இந்த சீரியலில் அண்மையில் நடந்த திருமணம் தான். அது வழக்கமான திருமணமாக நடைபெறவில்லை. இந்த சீரியலின் ஹீரோ பூமி என்பவர்ர் முத்தழகை திருமணம் செய்து கொள்ள, அப்போதுதான் அஞ்சல் எனும் கேரக்டர் வந்து தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்துக் காட்டி, “அவள் உனக்கு மனைவி என்றால் அப்போது நான் யார்..?” என்று பூமியிடம் கேட்கிறார்.
அப்போதுதான் ஹீரோவின் 2 பொண்டாட்டி குட்டி வெளிப்படுகிறது. இதற்கு பின் ஒரு முன்கதை ஒன்று இருக்கிறது. ஆம், மருத்துவமனையில் அஞ்சலி உடல்நிலை முடியாது இருந்தபோது ஆறுதலுக்காக, அவருக்கு துணையாக இருப்பதற்காக ஹீரோ பூமி அஞ்சலிக்கு தாலி கட்டி இருக்கிறார். ஆனால் அவர் உண்மையில் முத்தழகுவை விரும்பி இருக்கிறார்.
இந்த விஷயங்கள் அனைவருக்கும் தெரியவர, பஞ்சாயத்து வைத்து கேட்டபோது இரண்டு பெண்களும் முறையாக அவருடன் மனைவிகளாக வீட்டுக்குள் செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக கூறிவிட, இதற்குப் பிறகு அஞ்சலி மற்றும் முத்தழகு இருவரையும் பூமி சமாளிக்கும் காட்சிகள் இந்த சீரியலில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.
“கடைசியில் இந்த சீரியலையும் இரண்டு பொண்டாட்டிக்காரன் சீரியல் ஆக்கி விட்டார்கள்.!” என்று ரசிகர்கள் ஒரு புறம் சொல்லி வந்தாலும், இன்னொரு புறம் தற்போது வெளியாகியிருக்கும் புதிய புரோமோ இன்னும் வைரலாகி வருகிறது. காரில் முன்பக்க சீட்டில் பூமியின் அருகில் அமர்ந்து செல்வதற்கு, அஞ்சலி & முத்தழகு இரண்டு பேருமே அடம் பிடிக்கின்றனர்.
இதை பார்த்த பூமி, “நாம் காரிலேயே போகப்போவதில்லை.. மூவரும் ஒரே சீட்டில் பைக்கில் போவோம் வாருங்கள்.!” என்று கூறிச் செல்கிறார். பின்னணியில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் இருந்து டூ டுடு டூ டுடு பாடல் ஒலிக்கிறது. இந்த கதை எங்கே முடியப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.