www.garudabazaar.com

BB Jodigal 2: மோதிரம் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணிய அமீர்.! கண் கலங்கிய பாவனி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒட்டி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி BB ஜோடிகள்.

bigg boss Amir proposes pavani during dance BB Jodigal 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த சீசன்களை நடிகர் கமல்ஹாசன், ரம்யா கிருஷ்ணன், சிம்பு ஆகியோர் தொகுத்து வழங்கி இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், ஐந்தாவது சீசனில் ராஜூ ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களை கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் BB ஜோடிகள் நிகழ்ச்சி இதுவரை இரண்டு சீசன்களை கடந்து இருக்கிறது.

bigg boss Amir proposes pavani during dance BB Jodigal 2

இந்த இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி இருவரும் பங்கேற்று நடனமாடி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட பிரபல கோரியோகிராபர் அமீர் மற்றும் சீரியல் நடிகை பாவனி இருவரும் தற்போது நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடும் போது ஒவ்வொரு முறையும் அமீர் பாவனியை கவர்வதற்காக, அவருடைய இதயம் வெல்வதற்காக பல முயற்சிகளை செய்வார். அப்படித்தான் இந்த முறை நடனம் ஆடும் போதும் குழந்தைகளை அனுப்பி ரோஸ் கொடுத்து, பின்னர் தன் கையால் மோதிரம் கொடுத்து ப்ரொபோஸ் செய்துள்ளார்.

bigg boss Amir proposes pavani during dance BB Jodigal 2

அப்போது, “நானும் எவ்வளவோ வழிகளில் சொல்லி பார்த்து விட்டேன்.. இந்த முறை உனக்கு பிடிக்கும் என நம்புகிறேன்!” என்று சொல்லி ப்ரொபோஸ் செய்கிறார். இதை பார்த்த பாவனி ஆச்சிரியமடைந்து அசந்து போகிறார். மற்றவர்கள் அந்த மோதிரத்தை வாங்கிக் கொள்ளச் சொல்லி சுற்றி இருந்து குரல் கொடுக்கின்றனர். இந்த புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss Amir proposes pavani during dance BB Jodigal 2

People looking for online information on Amir pavani love, Amir Proposes Pavani, Bigg boss, Bigg Boss OTT, Bigg Boss Tamil will find this news story useful.