Pattamboochi

அப்டி போடு! பிரபல சீரியலில் Bigg Boss Julie .. Entry-யே செம கலக்கல்ப்பா.. வெளியான ப்ரோமோ.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் நிறைய பேர் பிரபலமாகி இருக்கின்றனர்.

Bigg Boss Julie entry in popular Tele Vision Serial

பிக்பாஸ் நிகழ்ச்சி:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே செலிபிரிட்டி அல்லது பிரபலமாக இருக்கும் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல் சமூகத்தில் ஏதோ ஒரு விதத்தில் இயங்கிக் கொண்டிருந்த சாமானியர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து சாதனையாளர்களாக உருவெடுத்திருக்கின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டவர் தான் ஜூலி. முந்தைய வருடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் என்கிற மெரினா புரட்சி மூலமாக இணையதளங்களில் வைரலானவர் ஜூலி.

கவனம் பெற்ற ஜூலி:

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்ற ஜூலி, அந்த சீசனில் இருந்து வெளியேறிய பிறகு தொடர்ச்சியாக மாடலிங்,  திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் என இயங்கி வந்தார். ஒரு சில திரைப் படங்களில் ஹீரோயினாக நடிப்பதாகவும் சில போஸ்டர்கள் வெளிவந்தன. அதன்பிறகும் பிக்பாஸ் ஜூலியை விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது காணமுடிந்தது.

பிக்பாஸ் ஓடிடி :

இதனிடையே, பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் ஜூலி மீண்டும் போட்டியாளராக கலந்து கொண்டார். 24 மணி நேரமும் டிஸ்னி+ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் அண்மையில் நடந்து முடிந்தது. இந்த சீசனில் ஜூலி கலந்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ஜூலி சீரியல் ஒன்றில் நடித்து இருக்கக்கூடிய புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜீ தமிழ் சீரியலில் எண்ட்ரி:

ஆம், ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல், “தவமாய் தவமிருந்து”. இந்த சீரியலில் ஒரு பெண்ணை வளர்க்கும் பெற்றோருடைய கதை காண்பிக்கப்படுகிறது. இதில் தங்களுடைய வயதுவந்த பெண் ஒரு திருமண நிகழ்ச்சியில் சென்று பணிப்பெண்ணாக வேலை பார்ப்பதை எதார்த்தமாக பார்க்கும் பெற்றோர் மிகவும் வருத்தம் அடைகின்றனர்.

இப்படியான காட்சிகள் அடங்கிய புரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் இவர்கள் அனைவரும் அட்டன்ட் பண்ணும் அந்த திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்ணாக வருபவர்தான் பிக் பாஸ் ஜூலி. 

Entry-யே செம கலக்கல்:

வந்தவுடனேயே டம்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஜூலி, தொடர்ந்து மணமகள் அறைக்கு (தனது அறைக்கு) செல்கிறார். அங்கு வரும் நாயகியை பார்த்து எப்படி இருக்கிறாய் என்று நலம் விசாரிக்கிறார். அதாவது அவருக்கு நாயகியை ஏற்கனவே தெரியும் என்பதாக காட்டப்படுகிறது. இப்படி ஜூலி திடீரென்று கேமியோ ரோலில் இந்த சீரியலில் நடித்து இருக்கிறார்.

இவருடைய காட்சிகள் தொடர்ச்சியாக எத்தனை நாட்கள் இருக்கும், அல்லது சீரியல் முழுவதும் ஜூலி வலம் வருவாரா.. என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. எனினும் ஜூலியின் இந்த திடீர் சீரியல் எண்ட்ரியால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கின்றனர்.

Also Read: பிரபல சீரியலில் இருந்து திடீரென விலகும் ஹீரோ.. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பதிவு..!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Julie entry in popular Tele Vision Serial

People looking for online information on BB Jodi, Bigg Boss Julie, Bigg Boss OTT, Julie, Julie entry in TV Serial, Tv Serial will find this news story useful.