www.garudabazaar.com

பாலா மூணு வருஷம் முன்னாடியே விஜய் டிவியில் கலந்துகொண்ட நிகழ்ச்சி... செம வைரலாகும் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிக முக்கியமான போட்டியாளராக மாறியிருக்கிறார் பாலாஜி. ஆரம்பத்தில் அமைதியாக இருந்து, பின்பு இருந்து 'Simply waste' என்ற பட்டத்தை பெற்றவுடன் அவருக்கு போட்டியின் மீதான ஆர்வம் அதிகமாகியது. அதன் பிறகு பல அதிரடிகளை செய்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

balaji in popular vijay tv show பாலா மூணு வருஷம் முன் விஜய் டிவியில்

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வைத்த டாஸ்க்கில் ரமேஷ், பாலா மற்றும் ரம்யா கலந்து கொண்டனர். அந்த போட்டி என்னவென்றால் சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிறத்திலான Cube-களை கூடையில் இருந்து கீழே தள்ள வேண்டும். கலர் மாற்றி கீழே தள்ளினால் அவர்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்று பிக் பாஸ் கூறி இருந்தார். இந்நிலையில் மற்ற போட்டியாளர்களும் கவனித்துக் கொண்டிருக்க பாலாஜி மற்ற கலர் Cube-களை  கீழே தள்ளினார். ஆனால் அதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கு கமல் நிச்சயம் குறும்படம் போடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் 2017ம் ஆண்டு பாலாஜி விஜய் டிவியில் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். 'கனெக்ஷன்' என்ற பிரபலமான நிகழ்ச்சியில் அவர், பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் பங்கேற்ற வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

பாலா மூணு வருஷம் முன்னாடியே விஜய் டிவியில் கலந்துகொண்ட நிகழ்ச்சி... செம வைரலாகும் வீடியோ..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

balaji in popular vijay tv show பாலா மூணு வருஷம் முன் விஜய் டிவியில்

People looking for online information on Balaji, Biggboss will find this news story useful.