www.garudabazaar.com

பாலாஜிக்கு இப்படி ஒரு விசித்திரமான 'ராசி' இருக்கா?... 'ஆதாரம்' காட்டும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேறியது பெரும்பாலான போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வழக்கமாக யார் வெளியேற போகிறார்கள் என்பது முன்பே தெரிந்து விடும் என்பதால் முதல் வாரத்தில் இருந்தே எவிக்ஷன் என்பது சுவாரஸ்யம் குறைவான ஒன்றாகவே இருந்தது. இதில் ரேகா வீட்டுக்கு போய் இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டதற்கு பின்தான் அவரின் வெளியேற்றம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Balaji is cried for Samyuktha eviction, Twitter Reacts

ஆனால் இந்த வாரம் ஜித்தன் ரமேஷ் வெளியேறியதாக தகவல்கள் வெளியான நிலையில் சம்யுக்தா வெளியேற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் #samyukta இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறார். அவர் வெளியேறும் போது போட்டியாளர்கள் அனைவரும் வந்து வழியனுப்பி வைத்தனர். பாலாஜி கண்ணீர் விட்டு அழுதார்.

தன்னுடைய உண்டியல் காயின்களை ஆஜீத்திடம் சம்யுக்தா கொடுத்தார். இந்த நிலையில் பாலாஜிக்கு ஒரு விசித்திரமான ராசி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது யாரெல்லாம் அவருடன் நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி விடுகின்றனர் என்பது தான் அது. இதற்கு உதாரணமாக சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோரை தெரிவித்து இருக்கின்றனர்.

எல்லாமே 'எஸ்'ல ஆரம்பிக்குது அப்போ அடுத்து யாரா இருக்கும்?

தொடர்புடைய இணைப்புகள்

Balaji is cried for Samyuktha eviction, Twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.