www.garudabazaar.com

ஏன் இன்னும் பிக்பாஸ் வரல... நடிகர் அசீம் வெளியிட்ட பதிவு... இதுதான் உண்மையான காரணமாம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தினமும் நடக்கும் சண்டை சச்சரவுகள் மூலம் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது. மேலும் விறுவிறுப்பை கூட்ட அடுத்தடுத்து வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் இறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அடுத்ததும் ஒரு விஜய் டிவி  பிரபலம் தான் நுழைய இருப்பதாக தகவல்கள் வைரலாகிறது.

real reason behind azeem entry getting late நடிகர் அசீம் வெளியிட்ட பதிவு

ஆம் ஷிவானியின் ரீல் ஜோடி நடிகர் அசீம் நுழைய உள்ளார் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் 'பகல் நிலவு' சீரியலில் ஒன்றாக நடித்தார்கள். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம் என்று சீரியலிலும் ஒன்றாக நடிக்கையில் சில எபிசோட்களுக்குப் பிறகு அந்த சீரியல் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஷிவானி வேறு ஒரு சேனலுக்கு மாறிவிட்டார்.

இந்நிலையில் அசீம்  பிக்பாஸ் வீட்டில் நுழைந்தால், எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ போகிறது என்பதை காண அனைவரும் ஆவலாக இருக்கின்றனர். ஆனால் அசீம் இன்னும் ஏன் வரவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அசீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார்.

அதில் "உண்மையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் அன்னையின் உடல் நலம் சற்று குன்றியது. அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தற்போது கடவுளின் கிருபையினால் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் பிக்பாஸ் வருவது உறுதி என்றும் அது தள்ளி போவதற்கான காரணம் என்ன என்பதையும் அவரே தற்போது வெளியிட்டுள்ளார்.

ஏன் இன்னும் பிக்பாஸ் வரல... நடிகர் அசீம் வெளியிட்ட பதிவு... இதுதான் உண்மையான காரணமாம்...! வீடியோ

Tags : Biggboss, Azeem

தொடர்புடைய இணைப்புகள்

real reason behind azeem entry getting late நடிகர் அசீம் வெளியிட்ட பதிவு

People looking for online information on Azeem, Biggboss will find this news story useful.