www.garudabazaar.com

நிஷாவை பற்றி ஒரே வார்த்தையில் பதிவிட்ட சுரேஷ்... என்ன இப்படி மோசமா சொல்லிட்டாரே..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே நிஷா தனது கலகலப்பான பேச்சினாலும், டைமிங் காமெடிகளாலும் மக்கள் மனதை பிடித்தார். ஆனால் ரியோவுடன் அவரது நட்பு வலுப்பெற்றது. அதன் பிறகு பலரும் அவர் ரியோ சொல்வதை தான் கேட்டு நடக்கிறார் என்று சில போட்டியாளர்களும், ரசிகர்களும் கூட குற்றச்சாட்டு வைத்தனர்.

suresh chakravarthy one word post about nisha in biggboss நிஷாவை பற்றி பதிவிட்ட சுரேஷ்

BPO டாஸ்க்கில் கூட ரியோ போனில் பேசிக் கொண்டிருந்த பொழுது நிஷா அவரது அன்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். அவர் ஏன் அழுதார் என்பது பலருக்கும் புரியவில்லை. இந்நிலையில் ரியோவை காப்பாற்றிவிட்டு வெளியே வந்த ஆஜித்தை அர்ச்சனா, நிஷா, சோம் அனைவரும் கொண்டாடினர். இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸில் கடுமையான போட்டியாளராக கருதப்பட்ட  சுரேஷ் சக்ரவர்த்தி திடீரென போட்டியில் இருந்து வெளியேறினார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. வெளிவந்த அவர் பிக்பாஸ் பற்றி பல கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் நிஷா பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "நிஷ(ம்) விஷம் #Biggboss" என்று கூறியுள்ளார். என்ன ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

suresh chakravarthy one word post about nisha in biggboss நிஷாவை பற்றி பதிவிட்ட சுரேஷ்

People looking for online information on Biggboss, Suresh will find this news story useful.