www.garudabazaar.com

தமிழ் Bigg Boss-ல இப்படி நடந்தா, யாரு வெளிய போவா?... வைரலாகும் வீடியோ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் கடந்த வாரம் சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். எனினும் இன்னும் பாதிக்கு மேல் போட்டியாளர்கள் அப்படியே இருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த சீசனில் கமல்ஹாசன் போட்டியாளர்களை சற்று கடுமையாக கண்டிப்பதை தவிர்த்து அறிவுரையை கூட டிப்ஸ் என்றுதான் கூறுகிறார் என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

biggboss telegu video goes viral about nagarjuna

ஆரம்பத்தில் அதாவது முதல் சீசனில் போட்டியாளர்களிடம் கமல் தவறுகளை தட்டிக் கேட்கும் அழகிற்கே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. இந்த முறை அவர் சற்று அமைதியைக் கடைபிடிப்பது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்த முறை தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அப்படி தெலுங்கில் அபிஜித் என்ற போட்டியாளர் தவறு செய்துவிட்டு மேடையில் மன்னிப்பு கேட்ட போது,  "இப்படி தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா. விதிகளை மதித்து விளையாடுவது என்றால் விளையாடுங்கள் இல்லை என்றால், வெளியேறி விடுங்கள்" என்று பிக்பாஸ் வீட்டின் கதவை திறந்து விடுகிறார்.

அதை பார்த்தவுடன் அந்த போட்டியாளர் பயத்தில் நடுங்குவதையும் பார்க்க முடிகிறது. இதை பார்த்த பலரும் இப்படி தான் போட்டியாளர்களை சரியாக கேட்க வேண்டும் என்றும், அப்படி நடந்தால் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் BIGG BOSS-ல இப்படி நடந்தா, யாரு வெளிய போவா?... வைரலாகும் வீடியோ...! வீடியோ

Tags : Biggboss, Kamal

தொடர்புடைய இணைப்புகள்

biggboss telegu video goes viral about nagarjuna

People looking for online information on Biggboss, Kamal will find this news story useful.