பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா?... எதிர்பார்க்காமல் நடந்த திருப்பம்..!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும், தற்போது தனது கருத்துக்களை வேண்டிய இடத்தில் சரியாக பதிவிடுவதால் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார் சம்யுக்தா.இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட அனிதா, பிக்பாஸ் கொடுத்த பாஸை பெற்றதை அடுத்து அவர் சம்யுக்தாவை நாமினேட் செய்தார்.

சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் தகவல் என்னவென்றால் இந்த வாரம் சம்யுக்தா பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. வேறு சிலரோ இல்லை ஜித்தன் ரமேஷ் தான் இந்த வாரம் வெளியேறினார் என்று கூறுகின்றனர். எனினும் உண்மை என்ன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கடுமையான போட்டியாளராக இருந்த சுரேஷ் திடீரென்று நீக்கப்பட்டதிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மக்கள் புரிந்துகொண்டனர். இந்நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஆவலாக உள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா?... எதிர்பார்க்காமல் நடந்த திருப்பம்..! வீடியோ