www.garudabazaar.com

பழனிசாமி தான் இனி ஹீரோவா? சீரியலை விட்டு விலகுறாரா? Baakiyalakshmi கோபி பரபரப்பு விளக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு பக்கம், கோபி மற்றும் ராதிகா ஆகியோரிடையே நடைபெறும் நிகழ்வுகளும், மறுபக்கம் பாக்கியா தனது குடும்ப நிலையை உயர்த்த கடினமாக உழைக்க முயற்சிப்பது குறித்தும் பாக்கியலட்சுமி தொடர் நகர்ந்து கொண்டிருக்கிறது.

Baakiyalakshmi Gopi sathish Clarification on Quitting rumours

இதனிடையே பிரபல 90ஸ் புகழ் நடிகர் ரஞ்சித்தும் பாக்கியலட்சுமி தொடரில் பழனிசாமி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க களமிறங்கி உள்ளார்.

இந்த நிலையில், கோபியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சதீஷ் குமார், அண்மையில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அதே பெயராகவே ரசிகர்கள் மத்தியில் மாறி போனவர் நடிகர் சதீஷ் குமார். காமெடியாக, பதற்றம் நிறைந்து என அனைத்து ஏரியாவிலும் சிறப்பாக நடித்து சிக்ஸர் அடிக்கும் சதீஷ் குமார், அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், "சம்மர் கட் பண்ணி இருக்கேன். ப்ரோமோ பார்த்திருப்பீங்க. ஹீரோ ரஞ்சித் சார் என்ட்ரி குடுத்து இருக்காரு. எங்களுக்கு நீங்க காட்டுற அதே அன்பு, மரியாதை, பாசம், நம்ம புது ஹீரோ ரஞ்சித் சாருக்கு நீங்க எல்லாம் காட்டணும். பாக்கியலட்சுமி முன்னாடி விட இன்னும் நிறைய பாராட்டையும், புகழையும் நீங்க கொடுக்கணும். என்னோட கோபி கேரக்டர் கொஞ்சம் குறையுறதுக்கு, ரொம்ப குறையுறதுக்கு வாய்ப்பு இருக்கு. இவ்வளவு தூரம் வந்தாச்சுல்ல, கிட்டத்தட்ட 3 வருஷம் ஆகப்போகுது. கிட்டத்தட்ட 800 எபிசோடு வரப்போகுது. இனிமேல் நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க போறேன். வயசு ஆச்சுல்லைங்களா" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த விஷயம், இணையத்தில் பாக்கியலட்சுமி ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகவும் மாறியது. இந்நிலையில் இந்த வீடியோ குறித்து தற்போது அதிகாரப்பூர்வ விளக்க வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் நடிகர் சதீஷ். இதில், “ரஞ்சித் கேரக்டர் பழனிச்சாமி என்கிற கேரக்டர் பெயரில் பாக்கியலட்சுமியில் புதிதாக இணைந்துள்ளதால் அது கொஞ்சம் டெவலப் ஆகும், அதனால் எங்களுக்கான காட்சிகள் குறையும் என்று கூறியிருந்தேன். ஆனால் ரஞ்சித் வந்ததால் நான் பாக்கியலட்சுமி சீரயலை விட்டு விலகுகிறேன் என்றெல்லாம் வதந்திகளை பார்க்க முடிகிறது, ஏன் இப்படி செய்கிறீர்கள். அப்படி எல்லாம் இல்லை” என்பதை விளக்கவே இந்த வீடியோ என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi Gopi sathish Clarification on Quitting rumours

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi serial episode today, Baakiyalakshmi Serial Today Episode, Baakiyalakshmi today will find this news story useful.