www.garudabazaar.com

"கோபி Character குறைய வாய்ப்பிருக்கு".. பாக்கியலட்சுமி நடிகர் வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொதுவாக எப்போதுமே டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று பிரத்யேக ரசிகர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

Baakiyalakshmi serial actor Sathish Kumar new video viral

Images are subject to © copyright to their respective owners

அதிலும் ஒவ்வொரு எபிசோடுகளும் விறுவிறுப்பாக செல்லும் பட்சத்தில் அந்த தொடர்கள் பலரின் ஃபேவரைட் லிஸ்ட்டிலும் நிச்சயம் இருக்கும். அந்த வகையில், ஒரு குறிப்பிடத்தக்க தொடர் தான் பாக்கியலட்சுமி. மக்களின் அமோக வரவேற்பை பெற்று விளங்கி வரும் இந்த தொடரில், குடும்ப தலைவலியாக இருக்கும் பாக்கியா முதன்மை கதாபாத்திரத்தில் வருகிறார்.

பட்டையை கிளப்பும் பாக்கியலட்சுமி

இவரது கணவர் கோபி தற்போது பாக்கியாவை பிரிந்து ராதிகாவுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் சூழலில், பாக்கியா இருக்கும் தெருவிலேயே ஒரு வீட்டில் குடியேறி வசித்து வருகிறார். மறுபக்கம் கணவரின் துணையின்றி தன்னுடைய குடும்பத்தையும், தொழிலையும் முன்னேற்ற தனியாளாகவும் பாடுபட்டு வருகிறார் பாக்கியலட்சுமி.

இந்த தொடரில் பாக்கியலட்சுமிக்கு மிகுந்த ஆதரவுடன் இருப்பது அவரது மகனான எழில் தான். எந்தவொரு சூழ்நிலையிலும் தாயை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து அவருக்கு பக்கபலமாக இருந்து வரும் எழில், வீட்டை தனது தந்தை கோபியிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கி தாய் பாக்கியவுடன் கொடுக்கவும் முற்படுகிறார். அப்படி இருக்கையில் பல்வேறு திருப்பங்களுக்கு மத்தியில், அமிர்தாவை கல்யாணம் செய்திருந்தார் எழில்.

Images are subject to © copyright to their respective owners

ஒரு பக்கம், கோபி மற்றும் ராதிகா ஆகியோரிடையே நடைபெறும் நிகழ்வுகளும், மறுபக்கம் பாக்கியா தனது குடும்ப நிலையை உயர்த்த கடினமாக உழைக்க முயற்சிப்பது குறித்தும் பாக்கியலட்சுமி தொடர் நகர்ந்து கொண்டிருக்கிறது.

என்ட்ரி கொடுத்த ரஞ்சித்

இதனிடையே பிரபல நடிகர் ரஞ்சித்தும் பாக்கியலட்சுமி தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க களமிறங்கி உள்ளார். இந்த நிலையில், கோபியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சதீஷ் குமார், தற்போது வெளியிட்டுள்ள வீடியோ, அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Baakiyalakshmi serial actor Sathish Kumar new video viral

Images are subject to © copyright to their respective owners

கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அதே பெயராகவே ரசிகர்கள் மத்தியில் மாறி போனவர் நடிகர் சதீஷ் குமார். காமெடியாக, பதற்றம் நிறைந்து என அனைத்து ஏரியாவிலும் சிறப்பாக நடித்து சிக்ஸர் அடிக்கும் சதீஷ் குமார், தற்போது பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'கோபி' சதீஷ் குமார் பரபர வீடியோ

அந்த வீடியோவில், "சம்மர் கட் பண்ணி இருக்கேன். ப்ரோமோ பார்த்திருப்பீங்க. ஹீரோ ரஞ்சித் சார் என்ட்ரி குடுத்து இருக்காரு. எங்களுக்கு நீங்க காட்டுற அதே அன்பு, மரியாதை, பாசம், நம்ம புது ஹீரோ ரஞ்சித் சாருக்கு நீங்க எல்லாம் காட்டணும். பாக்கியலட்சுமி முன்னாடி விட இன்னும் நிறைய பாராட்டையும், புகழையும் நீங்க கொடுக்கணும்.

Baakiyalakshmi serial actor Sathish Kumar new video viral

Images are subject to © copyright to their respective owners

என்னோட கோபி கேரக்டர் கொஞ்சம் குறையுறதுக்கு, ரொம்ப குறையுறதுக்கு வாய்ப்பு இருக்கு. இவ்வளவு தூரம் வந்தாச்சுல்ல, கிட்டத்தட்ட 3 வருஷம் ஆகப்போகுது. கிட்டத்தட்ட 800 எபிசோடு வரப்போகுது. இனிமேல் நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க போறேன். வயசு ஆச்சுல்லைங்களா" என குறிப்பிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி தொடரில் கோபியாக வந்து கலக்கிய நடிகர் சதீஷ்குமார், அவரது கதாபாத்திரம் தொடரில் குறையப் போவதாக குறிப்பிட்டுள்ள விஷயம், இணையத்தில் பாக்கியலட்சுமி ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi serial actor Sathish Kumar new video viral

People looking for online information on Baakiyalakshmi, Gopi will find this news story useful.