www.garudabazaar.com

மாரி செல்வராஜ் பிறந்தநாள்.. செம்மண் புழுதி பறக்கும் 'மாமன்னன்' படத்தின் BTS போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாமன்னன் படத்தின் புதிய BTS போஸ்டர் வெளியாகி உள்ளது.

Mari Selvaraj Birthday Mamannan New Poster BTS

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் கடந்தாண்டு மார்ச்-4 ல் துவங்கியது. இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடித்திருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

தற்போது சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வரும் உதயநிதி ஸ்டாலின், சில நாட்களுக்கு மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி திரைப்படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Mari Selvaraj Birthday Mamannan New Poster BTS

இந்த படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் வடிவேலு ஏற்கனவே துவங்கி உள்ளார். இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது 39-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். இயக்குனர் மாரி செல்வராஜை வாழ்த்த, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் மாமன்னன் படத்தின் புதிய BTS போஸ்டரை வெளியிட்டுள்ளது.  கன்னி & சிப்பி வேட்டை நாய்கள் சூழ செம்மண் புழுதி பறக்கும் சூழல் போஸ்டரில் அமைந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Mari Selvaraj Birthday Mamannan New Poster BTS

People looking for online information on Mamannan, Mari Selvaraj will find this news story useful.