www.garudabazaar.com
iTechUS

தெறிக்கவுடுறாங்களே..! பிரபல டிவி சீரியலில் ‘பாக்கியலட்சுமி ராதிகா’வின் புதிய பிரவேசம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் சிபு சூர்யனுடன் ரோஜா சீரியலில் இணைந்து நடித்தவர் நடிகை. அர்ஜூனாக சிபு சூர்யனும், ரோஜாவாக பிரியங்கா நல்காரியும் நடித்த ரோஜா சீரியலில், “அர்ஜூன் சார்” என அழைக்கும் விஷயம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

Baakiyalakshmi Radhika Character Reshma Pasupuleti New Role in Seetharaman Zee Tamil Serial

Also Read | தனுஷின் வாத்தி -யில் டீச்சராக வரும் ஹீரோயின் +2 வரைதான் படித்தாரா?.. அவரே சொன்ன தகவல்..!

இந்நிலையில் இவர் ஜீ தமிழில் சீதா ராமன் எனும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த சீரியல் கதைப்படி அக்காவுக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், தங்கையும் நாயகியுமான பெண்ணுக்கு திருமணம் எப்படியோ நடந்துவிடுகிறது. ஆனால் நாயகி அழகில்லை என்பதை காரணம் காட்டி நாயகன் வீட்டில் ஏற்க மறுக்கிறார்கள்.

அழகு என்பது மனதில் இருக்கிறது என்பதை நாயகி நிரூபித்து கணவரின் குடும்பத்தினருடன் இணைவாரா? என்பதை நோக்கி இந்த சீரியல் கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

Baakiyalakshmi Radhika Character Reshma Pasupuleti New Role in Seetharaman Zee Tamil Serial

இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிகிறது. இந்த சீரியலில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் வலிமையாக நடித்துள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி. ஆம் , வெளியான ப்ரோமோவிலேயே தனது அழுத்தமான மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் கேரக்டரில் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை 2 வதாக திருமணம் செய்துகொண்டு வாழும் அவரது காதல் மனைவியாக வரும் ராதிகா, சீதா ராமன் சீரியலில் முற்றிலும் புதிய பரிமாணத்தில் தோன்றியிருப்பது அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | Kantara 2 Update : "எதே... நாம பார்த்ததுதான் காந்தாரா 2 -ஆ?".. அடுத்த பார்ட் குறித்து அறிவித்த ரிஷப் ஷெட்டி..!

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi Radhika Character Reshma Pasupuleti New Role in Seetharaman Zee Tamil Serial

People looking for online information on Baakiyalakshmi, Seetha Raman, Seetharaman, Zee Tamil will find this news story useful.