www.garudabazaar.com

கவின் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 'DADA'.. பிரபல OTT-யில் ரிலீஸ் .. எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

“டாடா” படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Kavin Aparna Das Dada Movie OTT Streaming Date Announced

ரொமாண்டிக் திரைப்படமாக 'டாடா' திரைப்படம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார்  தயாரிப்பில் 'டாடா' படத்தினை அறிமுக இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கவின் மற்றும் அபர்ணா தாஸூடன்  K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ்,  பிரதீப் ஆண்டனி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார், கதிரேஷ் அழகேசன், எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார், சண்முக ராஜ் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

பட ரிலீஸ் அன்று இந்த படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில்  நடந்தது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Kavin Aparna Das Dada Movie OTT Streaming Date Announced

இந்நிலையில், டாடா படம் பிரபல அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Kavin Aparna Das Dada Movie OTT Streaming Date Announced

People looking for online information on Dada, OTT, Prime Video will find this news story useful.