Nenjuku Needhi

உதயநிதியின் "நெஞ்சுக்கு நீதி" FDFS பாத்துட்டு கூல் சுரேஷ் பேசிய வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

Actor cool suresh viral video after watching nenjukku needhi

Also Read | The wait is over… விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ பட ரிலீஸ் எப்போது… வெளியான official அறிவிப்பு.!

நெஞ்சுக்கு நீதி ரிலீஸ்…

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ’நெஞ்சுக்கு நீதி’இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக்கான இந்த படத்தை இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இன்று படம் பார்த்த ரசிகர்களும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

கதைக்களம்…

சாதிய வேறுபாடுகள் அதிகமாக இருக்கும் ஒரு கிராமப்புற பகுதி இருக்கும் காவல் நிலையத்துக்கு இந்த நிலவரங்கள் புரியாத படித்துவிட்டு ஐபிஎஸ் வேலைக்கு வரும் அதிகாரி ஒருவர் வேலையில் சேர்கிறார். அந்த பகுதியில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இரண்டு சிறுமிகளின் கொலை வழக்கை விசாரிக்கிறார். அதில் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார், சிறுமிகளுக்கான நியாயம் கிடைத்ததா என்பதே என்பதே கதைக்களம்.

Actor cool suresh viral video after watching nenjukku needhi

கூல் சுரேஷின் பாராட்டு…

சமீபகாலமாக நடிகர் கூல் சுரேஷ், ரிலீஸாகும் படங்களைப் பார்த்து தியேட்டர் வாசலிலியே ஊடகங்களை சந்தித்து படங்களைப் பற்றிய கருத்துகளைப் பேசிவருகிறார். அவரின் இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தைப் பார்த்து பேசியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் “இன்றைய இளைஞர்கள் கண்டிப்பா காணவேண்டிய படம். உதயநிதி சாருக்கு சல்யூட். இந்த மாதிரி ஒரு படம் கொடுத்ததற்கு உங்களுக்கும் இயக்குனர் அருண்ராஜா சாருக்கும் மிகப்பெரிய சல்யூட்.  உதயநிதி சார் இவ்ளோ நாளா இந்த நடிப்ப எந்த லாக்கர்ல போட்டு பூட்டி இருந்தீங்க. OK OK படத்துல சரவணனா இதுன்னு சொல்ற மாதிரி நடிச்சிருக்கீங்க. படத்துல நடிச்ச எல்லாருமே சிறப்பா நடிச்சுருக்காங்க.” எனப் பேசியுள்ளார்.

Actor cool suresh viral video after watching nenjukku needhi

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

உதயநிதியின் "நெஞ்சுக்கு நீதி" FDFS பாத்துட்டு கூல் சுரேஷ் பேசிய வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor cool suresh viral video after watching nenjukku needhi

People looking for online information on Cool Suresh, Nenjukku needhi will find this news story useful.