Nenjuku Needhi

‘நெஞ்சுக்கு நீதி’ எப்படி இருக்கு… படம் பார்த்துட்டு கீர்த்தி சுரேஷ் போட்ட Tweet – Viral pic

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Keerthy suresh tweet on Nenjukku needhi movie

Also Read | சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த KGF இயக்குனர்… வைரலாகும் ‘NTR 31’ Firstlook போஸ்டர்

நெஞ்சுக்கு நீதி..

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில்  உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ’நெஞ்சுக்கு நீதி’ படம் மே 20 (இன்று) ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் சென்சார் ஆன இந்த படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.  கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் தலைப்பான ‘நெஞ்சுக்கு நீதி’ யை படத்துக்கு வைத்துள்ளது கூடுதல் கவனத்தைப் பெற்றது.

Keerthy suresh tweet on Nenjukku needhi movie

பிரபலங்களுக்கான சிறப்பு திரையிடல்…

‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை உதயநிதியின் அடுத்த படமாக உருவாகி வரும்  ‘மாமன்னன்’ படத்தின் கலைஞர்களுக்காக சிறப்புத் திரையிடல் சமீபத்தில் நிகழ்ந்தது. இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் படத்தைப் பார்த்தனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது. முன்னதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் படத்தைப் பார்த்து பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy suresh tweet on Nenjukku needhi movie

கீர்த்தி சுரேஷின் பாராட்டு…

இன்று படம் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் படம் பற்றி தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இது சம்மந்தமான அவரது டிவீட்டில் “நெஞ்சுக்கு நீதி அழகான படம். உதயநிதி சார் தன்னுடைய வேடத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜின் சிறப்பான படைப்பு. நிகழ்காலத்துக்கு பொருந்தக்கூடிய ஒரு படைப்பைக் கொடுத்ததற்கு நன்றி போனி கபூர் சார். மாமன்னன் குழுவிடம் இருந்து வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோரோடு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Keerthy suresh tweet on Nenjukku needhi movie

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy suresh tweet on Nenjukku needhi movie

People looking for online information on கீர்த்தி சுரேஷ், நெஞ்சுக்கு நீதி, Keerthy Suresh, Keerthy suresh tweet, Nenjukku needhi movie will find this news story useful.