Nenjuku Needhi

கமல் நடிக்கும் விக்ரம்.. படத்தின் தெலுங்கு Title இதானா? வெளியான மிரட்டலான டிரெய்லர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் தெலுங்கு டிரெய்லர் வெளியாகியுள்ளது.

kamal haasan starring vikram movie telugu trailer

Also Read | பிரபல OTT-களில் இந்த வாரம் ரிலீசாகும் முக்கியமான படங்கள்.. எப்போ? எதுல? முழு தகவல்

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது.

தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

"விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

kamal haasan starring vikram movie telugu trailer

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மேக்கிங் வீடியோ, முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

kamal haasan starring vikram movie telugu trailer

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு  உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனம் மிகப்பெரிய சாதனை விலைக்கு வாங்கி உள்ளனர்.

kamal haasan starring vikram movie telugu trailer

மேலும் விக்ரம் படத்தின் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உரிமத்தை ஸ்ரேஷ்த்  மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் தெலுங்கு நடிகர் நிதினுக்கு சொந்தமானது ஆகும்.

இந்நிலையில் விக்ரம் படத்தின் தெலுங்கு டிரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழில் இருந்த அதே காட்சிகள், பின்னணி இசை தெலுங்கிலும் அமைந்துள்ளது.

kamal haasan starring vikram movie telugu trailer

விக்ரம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு "விக்ரம் ஹிட் லிஸ்ட்" என பெயரிடப்பட்டுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

கமல் நடிக்கும் விக்ரம்.. படத்தின் தெலுங்கு TITLE இதானா? வெளியான மிரட்டலான டிரெய்லர்.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

kamal haasan starring vikram movie telugu trailer

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram Movie, Vikram movie telugu trailer will find this news story useful.