Nenjuku Needhi

கேன்ஸ் பட விழா.. பூஜா ஹெக்டேவுடன் செல்ஃபி எடுத்த "LEGEND" A.R. ரஹ்மான்.. தீயாய் பரவும் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் (17.05.2022) அன்று தொடங்கி உள்ளது.

A R Rahman selfie with Pooja Hegde at Cannes Film Festival

Also Read | KGF விட பெரிய கனவுப் படம்.. 20 வருஷமா செதுக்கிய கதை.. #NTR31 படம் குறித்து பேசிய பிரசாந்த் நீல்!

75வது கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவின் தலைவராக பிரெஞ்சு நடிகர் வின்சென்ட் லிண்டன் இருப்பார். ஜூரியில் தீபிகாவுடன் இணைந்து நடிகர்-இயக்குனர் ரெபேக்கா ஹால், நூமி ராபேஸ் மற்றும் இத்தாலிய நடிகர்-இயக்குனர் ஜாஸ்மின் டிரின்கா மற்றும் இயக்குநர்கள் அஸ்கர் ஃபர்ஹாடி, லாட்ஜ் லை, ஜெஃப் நிக்கோல்ஸ் மற்றும் ஜோச்சிம் ட்ரையர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆண்டுக்கான வெற்றியாளர்களை மே 28 ஆம் தேதி கேன்ஸில் நடைபெறும் விழாவில் நடுவர் குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

இந்த விழாவில், இந்திய திரைப்படங்கள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள், திரையிடப்படவுள்ளது. அதே போல, பல நாடுகளில் இருந்து சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

A R Rahman selfie with Pooja Hegde at Cannes Film Festival

இந்தியாவின் சார்பில், பா.ரஞ்சித், தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே, தமன்னா, ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் மாதவன், பார்த்திபன், கமல்ஹாசன், நவாசுதீன் சித்திக், அதிதி ராவ் ஹைத்ரி, அனேகா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். கேன்ஸ் பட விழாவுக்கான செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையிலான இந்தியக் குழுவில் ஏஆர் ரஹ்மான், பூஜா ஹெக்டே, தமன்னா, நவாசுதீன் சித்திக், ஆர். மாதவன் மற்றும் சேகர் கபூர் உள்ளிட்டோர் உள்ளனர்.

A R Rahman selfie with Pooja Hegde at Cannes Film Festival

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கியுள்ள 'லி மஸ்க்' திரைப்படம், மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் படம், கமல் நடித்த 'விக்ரம்' படத்தின் டிரெய்லர் ஆகியவை, கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

A R Rahman selfie with Pooja Hegde at Cannes Film Festival

முதல் நாள் விழா முடிந்த பிறகு அனைத்து பிரதிநிதிகளும் இணைந்து இரவு உணவு உண்ட வீடியோவை  இன்ஸ்டாகிராமில் தமன்னா பதிவேற்றி இருந்தார். மேலும் இந்தியன் பெவிலியனில் நேற்று நடந்த வான வேடிக்கை நிகழ்விலும் பிரதிநிதிகள் பங்கெடுத்தனர்.  மே 20 தேதியுடன் பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில பிரதிநிதிகள் இந்தியாவுக்கு திரும்புகின்றனர். நடிகை தமன்னா மே 19 அன்றே தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

A R Rahman selfie with Pooja Hegde at Cannes Film Festival

இந்நிலையில் இசைப்புயல் ரஹ்மான், நடிகை பூஜா ஹெக்டே உடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பூஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். The Legend என இச்செல்ஃபி படத்துக்கு தலைப்பிட்டுள்ளார். இந்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

A R Rahman selfie with Pooja Hegde at Cannes Film Festival

People looking for online information on A R Rahman selfie with Pooja Hegde, AR Rahman, Cannes 2022, Cannes Film Festival, Pooja Hegde will find this news story useful.