பிரபாஸ் படத்தில் இருந்து விலகிய இந்த மெகா கூட்டணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பாகுபலி’ திரைப்படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாஹோ’ திரைப்படத்தில் இருந்து பிரபல இசை கூட்டணியான ஷங்கர் இசான் லாய் விலகியுள்ளனர்.

Shankar Ehsaan Loy opts out of Baahubali Prabhas's upcoming film 'Saaho'

சுஜீத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான ‘சாஹோ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் வெளியிடப்பட்ட நிலையில், இப்படத்திற்கு இசையமைக்கும் ஷங்கர் இசான் லாய் கூட்டணி விலகியுள்ளதாக அவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இப்படம் வரும் ஆகஸ்ட்.15ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இசையமைப்பாளர்கள் விலகியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, ‘சாஹோ’ படத்தின் புதிய இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கபப்டுகிறது. ‘பாகுபலி 2’ திரைப்படத்திர்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.