‘பாகுபலி’ திரைப்படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சாஹோ’ திரைப்படம் பற்றிய சுவாரஸ்ய தகவல் நாளை வெளியாகவுள்ளது.

சுஜீத் ரெட்டி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அதிரடி ஆக்ஷன் திரைப்படமான ‘சாஹோ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த சர்ப்ரைஸான தகவல் நாளை வெளியாகும் என நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவரது வீடியோவில், ‘ஹலோ டார்லிங்க்ஸ்.. ஹவ் ஆர் யூ..? நாளை உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கு.. எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாருங்கள்’ என கூறியுள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட்.15ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. ‘பாகுபலி 2’ திரைப்படத்திர்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.