Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

"BEAST", "தளபதி66" படங்களுக்கு பின் விஜய் நடிக்க போகும் இரண்டு படங்கள்.. FANS-க்கு டபுள் ட்ரீட்டா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் 67 & 68 வது படம் பற்றிய முக்கிய தகவல் பிரத்யேகமாக நமது Behindwoods தளத்திற்கு கிடைத்துள்ளது.

Vamshi Lokesh Kanagaraj and Atlee Next 3 directors for Vijay

சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK20 புதிய படம்! ஷூட்டிங் தமிழ் நாட்டில் எங்க? எப்போ?

கோலிவுட்டில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் கடைசியாக திரையில் காணப்பட்டார்.

இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையேயான காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. கோவிட் லாக்டவுனுக்கு பிறகு கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படங்களில் ஒன்றாக இந்தப் படம் இருந்தது.

Vamshi Lokesh Kanagaraj and Atlee Next 3 directors for Vijay

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65 வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vamshi Lokesh Kanagaraj and Atlee Next 3 directors for Vijay

கடந்த ஆண்டு சமீபத்தில் தான், இவரது அடுத்த படம் - தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vamshi Lokesh Kanagaraj and Atlee Next 3 directors for Vijay

இந்நிலையில் விஜய்யின் அடுத்த 67 & 68 வது படத்தின் இயக்குனர்களாக லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லியின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் அட்லி - விஜய் - லோகேஷ் கனகராஜ் - நெல்சன் திலீப்குமார் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Vamshi Lokesh Kanagaraj and Atlee Next 3 directors for Vijay

இந்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை விஜய் எடுத்ததாகவும் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். 

BREAKING: ரஜினி - நெல்சன் - SUN PICTURES இணையும் புதிய படத்தின் அறிவிப்பு எப்போ? தலைவர் வரார் டோய்!

தொடர்புடைய இணைப்புகள்

Vamshi Lokesh Kanagaraj and Atlee Next 3 directors for Vijay

People looking for online information on Atlee, Beast, Lokesh Kanagaraj, Thalapathy 67, Thalapathy 68, Thalapathy66, Vamshi, Vijay, Vijay 66 will find this news story useful.