www.garudabazaar.com

BREAKING: ஜோதிகாவின் அடுத்த படத்தை இயக்குகிறாரா பிரபல பெண் இயக்குனர்? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: ஜோதிகா தனது அடுத்த படத்தின் இயக்குனராக பிரபல பெண் இயக்குனரை தேர்ந்தெடுத்துள்ளார்.

Jyothika joins hands with director priya for the new movie

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் & டீசர் எப்போ? கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?

நடிகர்கள் சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா நடித்த 'சூரரை போற்று' மற்றும் ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்',ஜெய்பீம் ஆகிய படங்கள் அமேசான் ப்ரைமில் முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

கடந்த ஆண்டு செப்டெம்பர், அக்டோபர், நவம்பரில்  2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த 4 படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகின. அவை வாணி போஜன், ரம்யா பாண்டியன் நடித்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், ஜோதிகா மற்றும் சசிகுமார் நடித்த உடன்பிறப்பே, சூர்யா நடித்த ஜெய் பீம் ஆகியன. விரைவில் அருண் விஜய் மற்றும் அவரது மகன் நடிக்கும் ஓ மை டாக் படமும் அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக நடிகை ஜோதிகா கத்துக்குட்டி பட இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் "உடன்பிறப்பே" படத்தில் சசிக்குமாருடன் நடித்து இருந்தார். இந்த படம் அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை ஜோதிகா, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஒரு புதிய படம் நடிக்க உள்ளார். இந்த படத்தை எழுத்தாளர் பொன் பார்த்திபன் இயக்குகிறார். பொன் பார்த்திபன் ஏற்கனவே லோகேஷ் கனகராஜூடன் கைதி, மாஸ்டர் படங்களில் பணியாற்றி உள்ளார். மேலும் இயக்குனர் மித்ரனுடன் இரும்புத்திரை, ஹீரோ படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படத்தை மித்ரன் இயக்குகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல பெண் இயக்குனரான பிரியாவுடன் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தமிழில் ஏற்கனவே கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்களை இயக்கியவர். கடைசியாக கன்னடத்தில் ஆடி லட்சுமி புராணா படத்தை இயக்கியவர். இவர் இந்திய அரசுக்காக ஜோதிகா, சூர்யா, விஜய், மாதவனை வைத்து ஹீரோவா ஜீரோவா எனும் குறும்பட டாக்குமென்ட் படத்தை எடுத்தவர்.

அனுபமா பரமேஸ்வரன் போல ரசிகர்களுக்கு திடீர் இன்பதிர்ச்சி கொடுத்த திவ்யபாரதி!

Jyothika joins hands with director priya for the new movie

People looking for online information on 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், Actress Jyothika, ஜோதிகா, பெண் இயக்குனர், Director Priya, New movie will find this news story useful.