www.garudabazaar.com

பயந்துட்டாங்க.. நீ எண்ட்ட பேசாத - கமல் முன்னாடி சண்டை கட்டிய வனிதா & சுஜா BBUltimate

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Chennai, Bigg Boss Ultimate: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து சுஜா வருணி எலிமினேட் ஆகியுள்ளார். கடைசி வாரம், சுரேஷ் தாத்தாவில் எலிமினேஷன் அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து சுஜா வருணி எலிமினேட் ஆகியுள்ளார்.

BBUltimate Tamil Suja Vanitha heated argument infront of kamal

கமல் கேள்வி

இந்நிலையில் இந்த வாரம், கமல்ஹாசன், ஹவுஸ்மேட்ஸை சந்திக்க வருகை தந்தார். அப்போது திருடன் போலீஸ் டாஸ்க்கில் போலீஸ்காரர்கள் நேர்மையாக இருக்க வேண்டும், திருடர்கள் திருட வேண்டும் என்கிற விசயம் எல்லாம் விபரமாக தெரிந்த வனிதா ஏன் காபி பொடி பிரச்சனை போல், போலீஸ் - திருடன் விவகாரத்திலும் நேர்மையாக இருக்க வலியுறுத்தி போராடவில்லை என கமல் கேள்வி கேட்டார்.

BBUltimate Tamil Suja Vanitha heated argument infront of kamal

கமல் முன்னாடி சண்டை

இதேபோல், இந்த வீட்டில் சிலர் ரூல்ஸை பிரேக் பண்ணுவதாக சுஜா, சொல்ல, சிலர் என்பது யார் என கமல் கேட்க, ‘சிலர் என்பது முழுமையாக வனிதா தான்’ என சுஜா கூறிவிட்டார். அதன் பிறகு பேசிய வனிதா, “ரூல்ஸை பின் தொடர சொல்வதே நான் தான்.” என கூற, வனிதாவுக்கும் சுஜாவுக்கும் நடிகர் கமல் முன்னிலையில் வாதம் முற்றியது, பின்னர், “வனிதா பயந்துட்டாங்க..” என சுஜா கூற, பதிலுக்கு, “எண்ட்ட பேசாத” என வனிதா கூற, சுஜாவும் கீப் கொயிட் என கூறி வாதம் செய்துகொண்டனர்.

BBUltimate Tamil Suja Vanitha heated argument infront of kamal

பிக்பாஸ் ஓடிடி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பை போல் அல்லாமல் இந்த ஓடிடி நிகழ்ச்சி, எந்தவித சென்சார் கட் மற்றும் பெரிய அளவிலான காட்சிகள் கட் பண்ணப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமல் நடக்கிறது. பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் நடக்கக் கூடிய விஷயங்களை 24 மணி நேரமும் நேரலையில் காட்டப்பட்டு வருகிறது. அதே போல் இந்த நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

BBUltimate Tamil Suja Vanitha heated argument infront of kamal

People looking for online information on BBUltimate Tamil, KAMALHAASAN, Suja, Vanitha, Vanitha Vijayakumar will find this news story useful.