www.garudabazaar.com

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிரியா பவானி சங்கர் போட்ட வைரல் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் தனது காதலர் புகைப்படத்தை பகிர்ந்து வைரல் பதிவை இட்டுள்ளார்.

Actress Priya Bhavani Shankar Wishes Her Lover Birthday

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Actress Priya Bhavani Shankar Wishes Her Lover Birthday

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடைசியாக ஒ மணப்பெண்ணே, பிளட் மணி படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை,ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

Actress Priya Bhavani Shankar Wishes Her Lover Birthday

இந்நிலையில்,  நடிகை பிரியா பவானி சங்கர், தனது காதலருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ராஜ் வேல் எனும் நபரை ப்ரியா பவானி சங்கர் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். 

Actress Priya Bhavani Shankar Wishes Her Lover Birthday

தனது காதலர் ராஜ்வேல் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை ப்ரியா பவானி சங்கர் காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து காதலருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜ் மா நீங்கள் ஒரு மோசமான டீன் ஏஜ் பையனிலிருந்து இந்த அற்புதமான மனிதராக பரிணமித்ததைக் காண நான் ஒரு அதிர்ஷ்டசாலி. உங்களுக்கு ஏராளமான புன்னகை, சாகசங்கள், நட்பு, அன்பு, ஆசீர்வாதங்கள், அமைதி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி என்றென்றும்" என கூறியுள்ளார்.

Actress Priya Bhavani Shankar Wishes Her Lover Birthday

தொடர்புடைய இணைப்புகள்

Actress Priya Bhavani Shankar Wishes Her Lover Birthday

People looking for online information on Actress, ப்ரியா பவானி சங்கர், Kollywood, Priya Bhavani Shankar, Priya Bhavani Shankar Lover, Raajvel will find this news story useful.