Bigg Boss-ல ஏன் கணவரை பத்தி சொல்லல.. ரசிகர்கள் கேள்விக்கு LIVE-ல் மனம் திறந்த பிரியங்கா!
முகப்பு > சினிமா செய்திகள்Bigg Boss Tamil: விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பங்கேற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் VJ பிரியங்கா.

VJ பிரியங்கா
விஜய் டிவியின் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் VJ பிரியங்கா. தனக்கே உரிய கலகலப்பான பாணியில் நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் நிகழ்ச்சிகளை எடுத்துச் செல்லும் பிரியங்கா ரசிகர்களை எண்டர்டெயின் செய்வதில் வல்லவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொள்கிறார் என்கிற தகவல்கள் வெளியாகிய உடனேயே ரசிகர்கள், ஆஹா.. அப்படியானால் பிக்பாஸ் நிகழ்ச்சி, களை கட்டப் போகிறது. எப்போதும் கல கலவென பேசி சிரிக்கும் பிரியங்கா, பிக்பாஸில் இருந்தால், நாட்கள் போவதே தெரியாது என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
பிரியங்கா ரன்னர் அப்
பிரியங்காவும் உள்ளன்போடு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரிடத்திலும் பழகினார். பேசினார். சிரித்தார். கோபப்பட்டார். அழுதார். இந்த எல்லா உணர்வுகளையும் அளவில்லாமல் வெளிப்படுத்தி, அனைவரின் அன்பையும் பெற்றவராக பிக்பாஸால் வாழ்த்தப்பட்டு பாராட்டப் பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி நாளில் பிக்பாஸ் வீட்டுக்குள் ராஜூ மற்றும் பிரியங்கா இருவர் மட்டுமே எஞ்சியிருந்தனர். இவர்களில் ராஜூவை வெற்றி பெற்றவராக கமல்ஹாசன் அறிவித்தார். பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்தார், அதாவது ரன்னர் அப்-ஆக வந்தார்.
ரசிகர்கள் கேள்வி
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களுடன் தம்முடைய சமூக வலைதளங்கள் மூலம் நேரலையில் உரையாடிக் கொண்டிருந்தார் பிரியங்கா. அவரிடம் ரசிகர்கள் பலரும், “நீங்கள் எங்களுடைய இதயத்தை வென்றீர்கள், அன்பை பெற்றீர்கள். நீங்கள் ஒரு தூய அன்புள்ளம் கொண்டவர். அத்துடன் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்களுடைய கணவர் பற்றி எதுவுமே சொல்லவில்லை?” என்று கேட்டுள்ளனர்.
LIVE-ல் மனம் திறந்த பிரியங்கா
ரசிகர்களின் இந்த கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, “பர்சனல் கேள்விகள் நிறையவே கேட்கிறீர்கள். ஆனால் அவற்றைப் பற்றி இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது, கூடிய விரைவில் அதற்கான பதிலை நான் சொல்கிறேன்!” என்று தெரிவித்திருக்கிறார்.
அன்பால் காயப்பட்டிருக்கிறேன்..
மேலும் பேசிய பிரியங்கா, “பலருக்கும் அன்பைக் கொடுத்து நான் தோற்றுப் போயிருக்கிறேன், காயம் பட்டிருக்கிறேன், எனினும் அன்பு வைப்பதை தாண்டி, என் மீது நான் வைத்திருக்கும் அன்பு தான் என்னை இன்னும் வலிமை மிக்க ஒருவராக மாற்றியது. நம்மை நாம் மிகவும் நேசிக்க வேண்டும்.!” என்று குறிப்பிட்டார்.
நேர்மையாக விளையாண்டேன்
தொடர்ந்து, தன்னுடைய கேம் சிலருக்கு பிடிக்காமல் போனதாக குறிப்பிட்ட பிரியங்கா, “இருந்தாலும் பரவாயில்லை, என்னுடைய விளையாட்டை நான் நேர்மையாக விளையாண்டேன். அதை பிடிக்காதவர்களுக்கு பரவாயில்லை. அனைவருக்கும் பிடித்தது போல் என்னை நான் மாற்றிக்கொள்கிறேன்!” என்று பிரியங்கா தெரிவித்திருக்கிறார்.
திரும்பவும் எப்ப Host பண்ணுவீங்க?
இதனிடையே பிரியங்கா விஜய் டிவியில் மீண்டும் எப்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க போகிறார்? குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை எப்போது அவர் தொகுத்து வழங்கவிருக்கிறார்? என்று ரசிகர்கள் கேட்டனர்.. அதற்கு பதில் அளித்த பிரியங்கா, “எனக்கும் ஆசைதான். மிக விரைவில் அது நடக்கும்!” என்று பதில் அளித்திருக்கிறார்.
Also Read: விஜய் சேதுபதி, சந்தீப் கிஷனின் மைக்கேல்.. படத்தில் இணைந்த பிரபல நடிகை!.. வில்லன் இவரா?
BIGG BOSS-ல ஏன் கணவரை பத்தி சொல்லல.. ரசிகர்கள் கேள்விக்கு LIVE-ல் மனம் திறந்த பிரியங்கா! வீடியோ