பறக்கும் பிப்ரவரி கவிதைகள்.. சிவரஞ்சனி பேரு பிடிச்சிருக்கு.. ஆனா fake id ராஸ்கல்ஸ்.. பிரபல கவிஞர்!
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை, 1, பிப்ரவரி, 2022:- இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் முடிவில் பிரபல கவிஞர் மனுஷ்ய புத்திரனை திரையில் அனைவரும் பார்த்திருக்க கூடும்.

மனுஷ்ய புத்திரன்
திரைக்கலைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் மிகவும் பிடித்தமானவையாக மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் திகழ்கின்றன. அண்மைக்காலங்களிலும் சளைக்காமல் கவிதை எழுதி வரும் மனுஷ்யபுத்திரன், தினமும் எழுதும் கவிதைகள் எப்படியும் ட்ரெண்ட் ஆகிவிடுகின்றன. அப்படித்தான் அண்மையில் மனுஷ் எழுதிய டோலோ 650 கவிதை ட்ரெண்ட் ஆகி போனது.
டோலோ 650 கவிதை
அந்த கவிதையை பிரபல இயக்குநர் வசந்தபாலனும் பகிர்ந்து, தானும் கூட டோலோ மாத்திரை போட்டுவிடு உறங்க போவதாக தெரிவித்திருந்தார். இந்த கவிதை தொடர்பாக வந்த பல்வேறு கருத்துக்களை பார்த்த மனுஷ், “என்ன டோலோ 650 படிச்சதிலிருந்து அதை பார்த்தாலே சாப்பிடணும்போல இருக்கா? இதெல்லாம் ரொம்ப டெரரா போயிட்டிருக்கு..” என்று அவரே பதிவிட்டிருந்தார்.
காதல் என்ன செய்யும்
இப்படி ட்ரெண்டிங்கான கவிஞராகவும் நவீன இலக்கியங்கள் குறித்து எழுதியும் பேசியும் வருபவரான கவிஞர் மனுஷ்யப்புத்திரன் அண்மையில் எழுதிய, ‘காதல் என்ன செய்யும்’ என்கிற கவிதை கூட படு ட்ரெண்ட் ஆனது. இதனைத் தொடர்ந்து பலரும் சமூக வலைப்பங்களில், ‘ஒரு காதல் என்ன செய்யும்’ என தங்களுக்கு பொருத்தமான மைண்ட் வாய்ஸை பதிவுகளாக பதிவிட்டனர்.
அண்மையில் தான் காதலர் தினத்தை ஒட்டி மனுஷ் எழுதிய 2 கவிதைகள் வைரலாகின. ஒன்று மேற்சொன்ன, ‘ஒரு காதல் என்ன செய்யும்’ கவிதை, இன்னொன்று ‘காதலர் தின முன் தேதியிட்ட கவிதை’ என்கிற ஒரு கவிதை. தவிர ‘மிஸ் யூ .. இந்த முறையும் அவ்வளவுதான் சொல்ல முடிந்தது’ என்கிற மனுஷின் சமீபத்திய புத்தகம் விற்பனையாகி வருகிறது.
யாருகிட்ட...? .ராஸ்கல்ஸ்
இந்நிலையில் யாரோ ஒருவர், கவிஞர் மனுஷ்ய புத்திரனை குறிப்பிட்டு, ‘மனுஷ் பிறந்தது மார்ச் மாதமாக இருந்தாலும் மாதங்களில் அவர் பிப்ரவரி தான்’ என்று ஒரு பதிவை போட்டுள்ளார்.
இதை பகிர்ந்த மனுஷ், “ஸ்டேடஸ் என்னமோ பாந்தமாத்தான் இருக்கு...சிவரஞ்சனிங்கிற பெயரும் எனக்கு பிடிச்ச பெயர்தான்....ஆனா இதுல அஞ்சு மணி நேரமா ஒரு லைக் , ஹார்ட்டீன் கூட விழல..இது ஒண்ணு போதும் இது ஒரு பெண் அல்ல ஃபேக் ஐடி என்று தெளிய ....யாருகிட்ட...? .ராஸ்கல்ஸ்.” என்று ஜாலியாக கமெண்ட் அடித்திருக்கிறார்.