காதலர் தினத்தில் வேற மாறி சிங்கிள் - இமான்-சித்ஶ்ரீராம் ஹிட் காம்போவின் கிஃப்ட் இது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா நடித்துள்ள டெடி படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகியுள்ளது.

arya sayeesha imman sid sriram teddy thanimaiye song is out

ஆர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி. மிருதன், டிக்டிக்டிக் படங்களை இயக்கிய ஷக்தி சவுந்தர் ராஜன் இப்படத்தை இயக்குகிறார். ஜுங்கா, காப்பான் ஆகிய படங்களில் நடித்த சாயிஷா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் டெடி படத்தில் இருந்து தனிமையே எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. காதலர் தினமான இன்று, தனிமையில் இருக்கும் ஒருவன் பாடுவது போல இப்பாடல் உருவாகியுள்ளது. மதன் கார்க்கி இப்பாடலை எழுதியுள்ளார். சித்ஶ்ரீராம் இப்பாடலை பாடியுள்ளார்.

Entertainment sub editor