த்ரிஷா தான்.. ஆனா த்ரிஷா இல்ல - விஜய் சேதுபதி 96 பார்ட்-2 ப்ளானிங்கா..? Viral Click!
முகப்பு > சினிமா செய்திகள்96 இயக்குநர் ப்ரேம் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

96 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ப்ரேம் குமார். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு கிடைத்தது. மேலும் இத்திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான இத்திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் ப்ரேம் குமார் வீட்டிற்கு சென்று நடிகர் விஜய் சேதுபதி அவரை சந்தித்துள்ளார். ப்ரேம்குமார் வளர்த்து வரும் த்ரிஷா என்கிற பூனையுடன் விஜய் சேதுபதி இருக்கும் படத்தை அவர் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதியும் ப்ரேம் குமார் சந்தித்துள்ளதால், 96 படத்தின் அடுத்த பாகத்தை பற்றி ப்ளானிங்காக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே கருத்துக்கள் பரவி வருகின்றன.