#Breaking : சுந்தர்.சியின் அரண்மனை 3 - இணையும் பிக்பாஸ் பிரபலம்! ஷூட்டிங் முதல் காஸ்டிங் வரை All Details.
முகப்பு > சினிமா செய்திகள்சுந்தர்.சியின் அரண்மனை படம் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் அரண்மனை. இத்திரைப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்ப பெறுமளவில் கிடைக்க அரண்மனை படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இதையடுத்து தற்போது சுந்தர்.சி அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் எடுப்பதில் இறங்கியுள்ளார். இதில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரண்மனை படத்தில் இணைய போகும் நட்சத்திரங்களை பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் இத்திரைப்படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் விவேக் இத்திரைப்படத்தில் இணைவதாகவும் சொல்லப்படுகிறது. குஜராத் அருகில் உள்ள ராஜ்கோட்டில் 25 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக சொல்லப்பட்ட இத்திரைப்படத்தை சுந்தர்.சியின் அவ்னி மூவிஸே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.