விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்களாக ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தனியாக ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு பிரபலமாகி வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா. தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், ''என்னுடைய ட்விட்டர் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க. நிறைய கஷ்டங்களுக்கு பிறகு, என்னுடைய குழுவால் அதனை மீட்டு விட்டேன். எல்லோருக்கும் நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா தத்தா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஷாலின் பாயும் புலி, ஆறாது சினம் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
Sorry guys my twitter a/c was hacked after a lot of struggle and with the help of my team I got it back .... ty everyone
— Aishwarya dutta (@Aishwaryadutta6) February 5, 2020